»   »  அஜீத் பட ஷூடடிங் தொடங்கியது

அஜீத் பட ஷூடடிங் தொடங்கியது

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ajith
ராஜு சுந்தரம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் ஹாங்காங்கில் தொடங்கியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ரகசிய ஏஜென்ட் வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார் அஜீத். அவருக்கு ஜோடியாக ஷ்ரியா நடிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் 18ம் தேதி ஹாங்காங்கில் தொடங்கியுள்ளது. ராஜு சுந்தரம், அஜீத், கேமராமேன் அர்ஜூன் உள்ளிட்ட 40 பேர் கொண்ட குழு இதற்காக புதன்கிழமை இரவு ஹாஹ்காங் பயணமானது.

ஹாங்காங்க் விமான நிலையம் மற்றும் கடலில் அஜீத் சண்டை போடும் காட்சியைப் படமாக்கவுள்ளனர். இதில் அதி நவீன தொழில்நுட்பத்தையும், உத்திகளையும் பயன்படுத்தி மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் சண்டைக் காட்சிகளை படம் பிடிக்கவுள்ளனராம்.

இதற்காக ஹாங்காங்கில் உள்ள சண்டைப் பயிற்சித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனராம். இப்பணியில் சில சீன சண்டைப் பயிற்சியாளர்கள் உதவவுள்ளனராம்.

10 நாள் ஹாங்காங் ஷூட்டிங் தொடருமாம். இந்தக் காட்சி படத்தின் தொடக்கத்தில் வரும் என்று தெரிகிறது. பிப்ரவரி 2ம் வாரம் முதல் ஊட்டியில் வைத்து படப்பிடிப்பு முழு வேகத்தில் தொடரவுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil