»   »  ஜேம்ஸ்பாண்ட் தல-உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஜேம்ஸ்பாண்ட் தல-உற்சாகத்தில் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil
Ajith in Hongkong film shooting
ராஜூ சுந்தரம் இயக்கத்தில் தற்போது அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் படத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங்கில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட மியூசிக்கல் சேர் ரேஞ்சுக்கு நடந்த கதாநாயகி தேர்வில், ராஜூ சுந்தரத்தை தாஜா பண்ணி எப்படியோ நாயகியாகிவிட்டார் ஸ்ரேயா. இப்போது இன்னொரு நாயகியும் இருந்தால் தேவலை என்று இயக்குநர் ராஜூ கூறியதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் அஜீத்.

மும்பை மாடல் அழகிகளில் ஒருவரை இந்தப் பாத்திரத்துக்கு தேர்வு செய்துள்ளார் ராஜூ.

முதலில் இந்தப் படத்துக்கு வைக்கப்பட்ட பெயர் அக்பர். ஆனால் இந்தப் பெயர் அஜீத்துக்குப் பிடிக்காததால் (இதை அஜீத்தே பிரஸ் மீட்டில் கூறியது நினைவிருக்கலாம்) புதிய பெயரைத் தேடுவதில் ஒரு குழுவே மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்துக்காக அடர்ந்த தாடியுடன் புதிய கெட்டப்பில் கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தோன்றுகிறாராம் அஜீத்.

ஜாக்கி சானிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஸ்டண்ட் சிவா அஜீத்துக்காக விசேஷ சண்டை காட்சிகளை அமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் உதவியாளர் அர்ஜுனன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜைத்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தாராம் இயக்குனர். ஆனால் அஜீத்தின் விருப்பம் யுவன்தான் என்பதை அறிந்ததும், அமைதியாகிவிட்டாராம்.

ஹாங்காங் ஷூட்டிங் முடிந்ததும் அடுத்தகட்டமாக ஊட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது.

அஜீத்தின் இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. குறிப்பாக தங்கள் தல ஸேம்ஸ்பாண்ட் போன்ற வேடத்தில் நடிக்கிறார் என்பதை அறிந்ததும், இப்போதே, 'ஜேம்ஸ்பாண்ட் அஜீத் ரசிகர்கள் நற்பணி மன்றம்' என்றெல்லாம் பதிவு செய்ய அரம்பித்துவிட்டார்களாம்.

டடட்ட டைன்ன்...

Please Wait while comments are loading...