ரஷ்யா ஏர்போர்ட்டில் செம ஸ்மார்ட்டாக நம்ம தல அஜித்... தீயாய் பரவும் வீடியோ
சென்னை : அஜித் தற்போது வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டனர். ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக, வெளிநாடு செல்ல முடியாமல் படத்தின் வேலைகள் தாமதமாகி வந்தன.
முதலில் ஸ்பெனியில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட இந்த க்ளைமாக்ஸ் காட்சிகளை தற்போது ரஷ்யாவில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக சமீபத்தில் வலிமை படக்குழு ரஷ்யா சென்றது. ஆகஸ்ட் 20 ம் தேதி முதல் வலிமை படத்தின் ஷுட்டிங் ரஷ்யாவில் நடந்து வருகிறது.

ரஷ்ய ஏர்போர்ட்டில் அஜித்
ரஷ்ய விமான நிலையத்தில் அஜித் சென்றிறங்கிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. கருப்பு மாஸ்க், கருப்பு நிற கோட், சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் அஜித் கூலாக, செம ஸ்டையிலாக நடந்து செல்லும் காட்சிகளை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

4 நாட்கள் ஷுட்டிங்
ரஷ்யாவில் 4 முதல் 5 நாட்கள் மட்டுமே இந்த க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். அஜித் நடிக்கும் பைக் ரேஸ் சேஷிங் காட்சிகள் தான் எடுக்கப்பட உள்ளதாம். இதோடு வலிமை படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கும் முடிவடைய உள்ளதாம்.

நிறுத்தப்பட்ட சிரஞ்சீவி பட ஷுட்டிங்
தற்போது வலிமை படக்குழு ரஷ்யா சென்றுள்ளதால் தான், சிரஞ்சீவி நடிக்கும் காட் ஃபாதர் படத்தின் ஷுட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கேமிராமேன் நிரவ் ஷா தான், வலிமை படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறாராம். அதனால் ஒரு வாரத்திற்கு சிரஞ்சீவியின் பட ஷுட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாம்.

இதுதான் காரணமா
வலிமை படத்திற்காக ரஷ்யாவில் 4 நாட்கள் ஷுட்டிங்கிற்காக நிரவ் ஷா ஏற்கனவே கமிட் ஆகி இருந்ததால், சிரஞ்சீவி படக்குழுவினரும் ஓகே சொல்லி விட்டார்களாம். நிரவ் ஷா இந்தியா திரும்பிய உடன் சிரஞ்சீவி படத்தின் ஒளிப்பதிவு வேலைகளில் இறங்க உள்ளார்.

தீபாவளி ரிலீசா
போனி கபூரின் பேவ்யூ ப்ராஜக்ட் தயாரிக்கும் இந்த படத்தை பிரம்மாண்டமாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்தால் அஜித் ரசிகர்களுக்கு இது தல தீபாவளியாக இருக்கும் வகையில் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ராகேஷ் பதிவிட்ட ட்வீட்
அதே சமயம் சமீபத்தில் வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கவுதமன் சமீபத்தில் பதிவிட்ட ட்வீட்டில் வலிமை படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு வெளியிடப்பட உள்ளதாக கூறி இருந்தார். ரஜினியின் அண்ணாத்த படம் மட்டுமே தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் கூறி இருந்தார்.

விரைவில் ரிலீஸ் தேதி
அஜித்தின் வலிமை படம் தீபாவளி ரிலீசா அல்லது ஆயுத பூஜை ரிலீசா என்பதை விரைவில் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். ரஷ்யா படப்பிடிப்பு முடிந்ததும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை படக்குழு துவக்க உள்ளது. ஏற்கனவே எடிட்டிங் உள்ளிட்ட வேலைகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டு விட்டதால், ரசிகர்களை இனியும் காக்க வைக்காமல் ஆயுத பூஜைக்கு படத்தை வெளியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











