»   »  மிரட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆளா அஜீத்: ரெமோ வினியோகஸ்தர்

மிரட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆளா அஜீத்: ரெமோ வினியோகஸ்தர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மிரட்டல்களுக்கு எல்லம் பயப்படும் ஆள் அஜீத் இல்லை என பிரபல திரைப்பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நிக் ஆர்ட்ஸ் மூவிஸ் தயாரிப்பில் அஜீத் பல படங்களில் நடித்துள்ளார். நிக் ஆர்ட் மூவிஸின் சக்கரவர்த்தியும் அஜீத்தும் நண்பர்களாக இருந்தவர்கள். பின்னர் மனக்கசப்பால் பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து அஜீத் நிக் ஆர்ட்ஸ் மூவிஸ் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து பிரபல திரைப்பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தற்போது கூறுகையில்,

அஜீத்

அஜீத்

சக்கரவர்த்தி கஷ்டப்படுகிறார் என்று நான் அஜீத்திடம் தெரிவித்தேன். உடனே அவர் அப்போது அவர் வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்திற்கு சக்கரவர்த்திக்கு படம் பண்ணுவதாக கூறினார்.

நடித்தார்

நடித்தார்

தான் வாக்கு கொடுத்தபடியே அவர் சக்கரவர்த்தியின் படத்தில் நடித்தார். ஆனால் அதன் பிறகு நிக் ஆர்ட்ஸுக்கு படம் பண்ண மாட்டேன் என அஜீத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

மிரட்டல்

மிரட்டல்

அஜீத்தை யாரும் மிரட்டவில்லை. மிரட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆளா அவர். கொடுத்த சொல்லை காப்பாற்றிவிட்டார் என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள்

நடிகர்கள்

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் வினியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் சிவாவுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை கொடுக்கும் நடிகர்களின் பெயரை வெளியிடட்டுமா என கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Film distributor Tirupur Subramaniam said that Ajith is not the person who is scared of threats.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil