»   »  தனுஷ் தன் படப் பாடல்களை எங்கிருந்து எழுதுகிறார் தெரியுமா...?

தனுஷ் தன் படப் பாடல்களை எங்கிருந்து எழுதுகிறார் தெரியுமா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் அவர்களை பலமுறை சந்தித்து இருக்கிறேன். அவர் ஒரு எளிமையான மற்றும் பண்புள்ள மனிதர் என்று நடிகர் அஜித்தைப் புகழ்ந்திருக்கிறார் தனுஷ்.

தங்கமகன் படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து நேற்று மாலை 7 மணியளவில் தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் நேரடி உரையாடல் நிகழ்த்தினார் தனுஷ்.


அவற்றில் ரசிகர்களின் சில சுவாரசியமான கேள்விகளுக்கு தனுஷ் அளித்திருக்கும் பதில்களை இங்கே பார்க்கலாம்.


உங்கள் பாடல்

உங்கள் பாடல் வரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள். என்று கேட்ட ரசிகரிடம் "நான் பாடல்களை எனது இதயத்தில் இருந்து எழுதுகிறேன். அம்மா, அம்மா மற்றும் பிறை தேடும் இரவிலே 2 பாடல்களையும் எழுதியதற்காக பெருமைப்படுகிறேன்" என்று தனுஷ் கூறினார்.


எப்படி சமாளிக்கிறீர்கள்

ஒவ்வொரு படத்திற்குமான அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு "நான் எந்த மன அழுத்தத்தையும் ஏற்படுத்திக் கொள்வதில்லை. நான் எனது வேலையை விரும்பி செய்கிறேன் மற்றும் அதில் என்னுடைய திறமையை வெளிக்கொணர முயற்சி செய்கிறேன்" என்று கூறினார்.


எமி ஜாக்சனுடன்

படப்பிடிப்புத் தளத்தில் எமி ஜாக்சனுடன் பேசும்போது கடினமாக இருந்ததா? இந்தக் கேள்விக்கு ஹா ஹா என்று சிரித்து விட்டு ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. போகப்போக பழகி விட்டது என்று கூறினார்.


அஜீத்

அஜீத் சாரைப் பற்றி கூறுங்கள். "நான் அஜீத் சாரைப் பலமுறை சந்தித்து இருக்கிறேன். அவர் ஒரு எளிமையான மற்றும் பண்பான மனிதர்" என்று தனுஷ் பதிலளித்தார்.


English summary
Actor Dhanush Reply his Fans Question "yes i have met ajith sir many times. he is a simple and very humble human being. a perfect gentleman".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil