twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உழைப்பாளர்கள் தினத்தில் உதித்த நாயகன்.. அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா?

    |

    சென்னை: 11 வருஷத்துக்கு முன்பாக ரசிகர் மன்றத்தை ஒரே அறிக்கையில் கலைத்த நடிகர் அஜித், சமீபத்தில், 'தல' என ரசிகர்கள் தொண்டை வலிக்க கத்தி தீர்த்த அந்த மந்திரச் சொல்லையே தூக்கி எறிந்து விட்டார்.

    எளிமையான குணம், பல துறையில் கவனம், சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்ப்பது என தனக்கென சில வரைமுறை வகுத்துக் கொண்டு அதன் படி நேர்மையாக நடக்கும் அஜித் குமாரின் 51வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    மே 1ம் தேதி என்றால் உழைப்பாளர்கள் தினம் என்பதையே மறந்து தமிழ்நாட்டில் அனைவரும் அஜித்தின் பிறந்தநாள் தினமாகவே அதனை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்... டபுள் ட்ரீட்டுக்கு காத்திருக்கும் ரசிகர்கள் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்... டபுள் ட்ரீட்டுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

    அஜித் பிறந்தநாள்

    அஜித் பிறந்தநாள்

    1971ம் ஆண்டு மே 1ம் தேதி ஆந்திர பிரதேசத்தில் (தெலங்கானா) உள்ள செகந்தராபாத்தில் பிறந்தார் அஜித்குமார் சுப்பிரமணியம். அப்பா சுப்பிரமணியம் கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர். அம்மா மோகினி கொல்கத்தாவின் சிந்தியை சேர்ந்தவர். வலிமை படத்தில் வருவது போலவே அஜித் குமாருக்கு அனுப் குமார் என ஒரு அண்ணனும், அனில் குமார் என ஒரு தம்பியும் உள்ளனர்.

    51வது பிறந்தநாள்

    51வது பிறந்தநாள்

    தமிழ்நாடு முழுவதும் அஜித் ரசிகர்கள் இன்று நடிகர் அஜித்தின் 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். 1990ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் படத்தில் பள்ளி செல்லும் மாணவனாக சின்ன ரோலில் நடித்த அஜித், 1993ம் ஆண்டு வெளியான அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். 1996ம் ஆண்டு வெளியான காதல் கோட்டை படம் தான் அஜித்துக்கு மிகப்பெரிய முதல் வெற்றியை பரிசளித்தது.

    60 படங்கள்

    60 படங்கள்

    அமராவதி முதல் வலிமை வரை மொத்தம் 60 படங்களில் அஜித் நடித்துள்ளார். அடுத்ததாக ஏகே 61 மற்றும் 62 படங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், முகவரி, தீனா, வில்லன், வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், என்னை அறிந்தால், வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன.

    105 கோடி சம்பளம்

    105 கோடி சம்பளம்

    ஆரம்பத்தில் ஒரு கோடி வாங்குவதே தமிழ் சினிமா நடிகர்களுக்கு பெரிய தொகையாக இருந்தது. ஆனால், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தற்போது 100 கோடிக்கும் அதிகமாக ஒரு படத்துக்கு சம்பளம் வாங்குகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்திற்கு அவருக்கு 105 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சராசரியாக ஒரு படத்திற்கு 70 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார் அஜித்.

    சொகுசு கார்கள்

    சொகுசு கார்கள்

    நடிகர் அஜித் ஒரு தீவிர ரேஸர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அஜித்திடம் உலகின் மிக விலை உயர்ந்த பைக்குகளும், கார்களும் உள்ளன. ரூ. 4.80 கோடி மதிப்பில் Ferrari 458 Italia கார் வைத்துள்ளார். BMW 740 Li - ரூ. 87 லட்சம், Honda Accord V6 - ரூ. 30 லட்சம், BMW S1000RR, ரூ. 24 லட்சம், Aprilia Caponord 1200 - ரூ. 20.25 லட்சம், BMW K1300 S - ரூ. 21.8 லட்சம், Kawasaki Ninja ZX 14R - ரூ. 19 லட்சம் என கூறப்படுகிறது. இப்படி காஸ்ட்லியான கார்களையும் பைக்குகளையும் வைத்திருக்கிறார் நடிகர் அஜித்.

    375 கோடி சொத்து

    375 கோடி சொத்து

    இதுவரை 60 படங்கள் நடித்துள்ள நடிகர் அஜித்திடம் 375 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்னேஷ் சிவன் படத்தின் சம்பளமும் சேர்ந்து வந்தால் 450 கோடிக்கும் அதிகமான சொத்துக்கு சொந்தக்காரர் ஆகி விடுவார் அஜித் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவை தாண்டி சில பிசினஸ்களையும் அஜித் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Ajith Kumar celebrated his 51st birthday today. Here we look at his net worth and salary details. Ajith Kumar fans celebrating his birthday in a tremendous way.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X