பொங்கலை குறிவைத்த அஜித்தின் மாஸ் படங்கள் – ஒரு அலசல்
சென்னை : அஜித்தின் 60 வது படமாக உருவாகி உள்ள வலிமை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் ட்விட்டரில் வலிமை, ஹச்.வினோத், தல பொங்கல்,வலிமை பொங்கல் போன்ற ஹாஷ்டாக்குகள் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகின்றன.
விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு போட்டியாக அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதால் தல - தளபதி ரசிகர்கள் இடையே தங்கள் ஃபேவரைட் ஸ்டார்களின் படங்கள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருவரில் யாருடைய படம் அதிக வசூலை பெறும், எந்த படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகம் இருக்கும், எந்த படம் ஹிட் ஆகும் என பல கேள்விகள் எழுந்துள்ளன.

அஜித்தின் பொங்கல் ஹிட்
ஆனால் அஜித்தின் திரையுலக பயணத்தை திரும்பி பார்த்தால், அவரின் முக்கியமான மாஸ் படங்கள் பலவும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. அப்படி பொங்கல் ரிலீசாக வெளியிடப்பட்ட படங்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆகி உள்ளன. அந்த வரிசையில் வலிமை படமும் வசூலில் புதிய சாதனை படைத்து மெகா பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் என வலிமை டீமும், அஜித் ரசிகர்களும் நம்புகிறார்கள்.

முதல் படமே ஹிட்
அஜித்தை ரொமான்டிக் ஹீரோவாக முதன் முதலில் அடையாளம் காட்டிய படம் வான்மதி. 1996 ல் வெளியான இந்த படம் பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்யப்பட்டது. நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் அஜித்திற்கு பெரிய ஹிட் கொடுத்தது. பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்ட அஜித்தின் முதல் படம் இது தான்.
Recommended Video

பொங்கல் ரிலீஸ் படங்கள்
இதைத் தொடர்ந்து மாஸ் ஹீரோவாக அஜித்தின் இமேஜை உயர்த்தி, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களான ரெட், ஆழ்வார், பரமசிவம், தீனா, வீரம், விஸ்வாசம் போன்ற படங்களும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்யப்பட்டன. அதிலும் வீரம் மற்றும் விஸ்வாசம் படங்கள் ஜனவரி 10 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு, பிரம்மாண்ட ஹிட் கொடுத்தன. இந்த படங்களின் வெற்றியை தற்போது வரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜனவரி 13 தான் ரிலீசா
இந்த வரிசையில் வலிமை படமும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் அஜித்தின் எட்டாவது படம் வலிமை ஆகும். அனேகமாக வலிமை படம் ஜனவரி 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் வலிமை மற்றும் பீஸ்ட் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு வாய்ப்பு மிக குறைவு. பீஸ்ட் ரிலீஸ் செய்யப்படுவதற்கு ஒரே நாள் முன்பாகவே வலிமை படம் ரிலீஸ் செய்யப்படலாம்.

வியாழக்கிழமை சென்டிமென்ட்
நேர்கொண்ட பார்வை தவிர அஜித் கடைசியாக நடித்த நேரடி தமிழ் படங்களின் பெயர்கள் வி என்ற ஆங்கில எழுத்திலேயே துவங்குவதாக அமைக்கப்பட்டு வந்தன. வீரம், விஸ்வாசம் வரிசையில் தற்போது வலிமை இணைந்துள்ளது. இதே போல் அஜித் படங்கள் வியாழக்கிழமையிலேயே ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. புதிய படங்களின் ரிலீஸ் வெள்ளிக்கிழமை தான் என்ற நடைமுறையை மாற்றியவர் அஜித் தான். அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் தற்போது ரஜினி படங்களுக்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பேட்டயை மிஞ்சிய விஸ்வாசம்
அஜித்தின் பொங்கல் ரிலீஸ் சென்டிமென்ட், வியாழக்கிழமை சென்டிமென்ட் ஆகியன சேர்ந்து வருவதால் ஜனவரி 13 ம் தேதியே வலிமை ரிலீஸ் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. 2020 ம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட ரிலீஸ் ஆன போதும், அதே சமயத்தில் ரிலீசான அஜித்தின் விஸ்வாசம் தான் அதிக வசூலையும், வரவேற்பையும் பெற்றது. படம், பாட்டு, வசனம் என அனைத்தும் செம ஹிட் ஆகின.


Click it and Unblock the Notifications











