For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹீரோ .. ஹீரோ ..

  By Staff
  |

  விக்ரம், விஜய், சிம்பு, மாதவன் என ஒரு பட்டாளம் படு கலக்கலாக கோலிவுட்டை கலக்கி எடுத்துக் கொண்டிருக்க அஜீத்தும்,பிரசாந்த்தும் சப்தமே காட்டாமல் அமைதியாக உள்ளனர்.

  ஒரு காலத்தில் பெண்களின் கனவுக் கண்ணன்களாக அஜீத்தும், பிரசாந்த்தும் வலம் வந்தனர். ஆனால் இன்று? அவர்களது இடத்தில்யார் யாரோ வந்து அமர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கிணற்றில் போட்ட கல் மாதிரி நிசப்தமாகஇருக்கிறார்கள். என்ன ஆச்சு இருவருக்கும்?

  அஜீத் இரண்டு படங்களில் நடித்து வந்தார். ஜனா மற்றும் மகா. இதில் ஸ்னேகாவுடன் நடித்து வந்த ஜனா படம் டிராப் ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது. படத்தின் கதை அஜீத்திற்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. (வழக்கமாக ஸ்னேகா நடித்துவரும் படங்கள் வந்து தான் ஊத்தும். இந்தப் படம் வராமலேயே ஊத்திவிட்டது. இவருக்கு ஆனந்தம் தவிர எந்தப்படமும் ஓடவில்லை)

  ஆனால் ஜனா படம் டிராப் ஆகவில்லை, ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் வட்டாரம்சமாளிக்கிறது. என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதேசமயம், ஆஞ்சநேயா என்ற புதியபடத்தில் அஜீத் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

  சிட்டிசன் படத்திற்குப் பிறகு அஜீத்தின் திரையுலக வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சரிவு தொடங்கிவிட்டது என்கிறார்கள் கோலிவுட்டில். கடைசியாக வந்த வில்லன் படம் ஓரளவு நன்றாக ஓடியும்கூட அஜீத்தின் மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை.

  கூலான கேரக்டரில் நடிப்பதுதான் அஜீத்திற்கு பொருத்தமாக இருக்கு. அதை விட்டு விட்டு அவர்முகத்திற்கு சற்றும் பொருந்தாத, சீரியஸான, அடிதடி கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்ததே அவர்செய்த மிகப் பெரிய தவறு என்று ஒருதரப்பு கூறுகிறது.

  அதை உணர்ந்து கொண்டுள்ள அஜீத் இப்போது கேரக்டர்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனம்காட்டி வருவதாகக் கூறுகிறார்கள்.

  மேலும் சரண் போன்ற தன்னை வாழ வைத்த டைரக்டர்களுடன் மோதுவதையும் விட்டுவிட்டுஅவர்களிடம் போய் தானே சரண்டராகவும் ஆரம்பித்துள்ளார் அஜீத். இந் நிலையில் இவரது மகாபடத்தின் கதையைத் தான் சாமியாக மாற்றிவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

  அந்தக் கோபத்தை வெளியிலும் காட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம் அஜீத். கார் ரேஸில்அஜீத் கவனம் காட்டுவது கூட சினிமாவில் ஏற்பட்ட சறுக்கல்களால் தான் என்கின்றனர்.

  பிரசாந்து.. பிரசாந்து...

  பிரசாந்த் கதைக்கு வருவோம். ரொம்ப காலாக நடித்துக் கொண்டிருக்கும் இளம் நடிகர் இவர். ரோஜாவின் அறிமுகமாகி10 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால், இதுவரை இவர் நட்சத்திர அந்தஸ்தைப் பெறவேயில்லை.

  விக்ரம், விஜய், அஜீத்திற்கு முன்னாடியே திரையுலகில் எண்டர் ஆகிவிட்ட பிரசாந்த் நல்லபடங்களில் நடித்திருந்தும், நல்ல கேரக்டர்களில் நடித்திருந்தும், முன்னணிக்கு வர அவருக்கு லக்இல்லை என்கிறார்கள்.

  ஜீன்ஸ் படத்திற்குப் பிறகு அவருக்குப் பெயர் சொல்லும்படியாக ஒரிரு படங்களே வந்தன. இதில்பார்த்தேன் ரசித்தேன், தமிழ் ஆகியவை தவிர மற்றவை பெரிய அளவில் தயாரிப்பாளர்களுக்குலாபம் தரவில்லை.

  இப்போதைக்கு பிரசாந்த் கைவசம் இருப்பது அமிஷா படேலுடன் நடிக்கும் என்ன விலை அழகே,கிரணுடன் நடித்து வரும் வின்னர் மற்றும் ஜெய் ஆகிய படங்கள். இதில் என்ன விலை அழகே படம்வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படம் வருவதே சந்தேகம் தான்.

  வின்னர் படமும் ரொம்ப நாளாகவே ஒத்தி வைப்பில் உள்ளது. இதனால் அவர் நம்பி இருப்பதுஜெய் படத்தை மட்டுமே. இது கூட அவரது சொந்தத் தயாரிப்பு தான்.

  மிகுந்த கவனத்துடன் இந்தப் படத்தில் பிரசாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தையே அவர்பெரிதும் நம்பியுள்ளார்.


  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X