»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

நல்ல கதை இருந்தா மட்டும் தான் படம் ஜெயிக்கும். சும்மா ரசிகர்கள் மட்டும் இருந்துட்டா படம் ஜெயிச்சுறாது எனஅஜீத் கூறியுள்ளார்.

குங்குமம் இதழுக்கு அஜீத் அளித்துள்ள சிறப்புப் பேட்டி:

நான் கஷ்டப்பட்டு சினிமாவில் வந்துட்டு இருந்த காலத்தில் என் மனசை நோகடிச்சவங்க நிறைய பேருஇருக்காங்க...... அதனால ஒரு கால கட்டத்தில் நம்பர் ஓண்ணா வந்து காட்றேன் என்று பேட்டி கொடுத்தேன்.

நான் அரகன்சானவன் என்ற காரணத்தினால் அந்தப் பேட்டி தரல. கான்பிடன்ஸானவன் என்ற முறையில் அந்தப்பேட்டிகள் தந்தேன்.

அந்த ஒரு விஷயம் என்னை நோகடிச்ச சிலருகிட்ட போய்ச் சேரணும். டேய்.....நான் அழிஞ்சி போகலடா...வருவேன். உன் கண் எதிரே நல்லா வாழ்ந்து காட்டுவேன் என்று அதுக்காகக் கொடுத்த சில பேட்டிகள்.

அதே போல வந்து சாதிச்சிட்டேன். அதுக்குப் பிறகும் அந்தக் கோபத்தை கன்டினியூ பண்றது நாகரீகமா படல.நல்லதாகத் தெரியல. அதனால் விட்டுட்டேன். சினிமாவில இடம் பிடிக்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம்.அதிலும் முன்னணி நடிகராக வந்து இடம் பிடிக்கிறது அதைவிட கஷ்டம்! நான் கஷ்டப்பட்டு ஒரு இடத்தைப்பிடிச்சேன்! அந்த இடம் இருக்கா இல்லையா என்பதற்கு என் படங்கள் பதில் சொல்லும்.

ஆனா ஒன்று நிச்சயம், சினிமாவில் இனி நம்பர் ஒன் என்பது யாருக்குமே நிரந்தரம் கிடையாது. இனி அதுமாறிக்கிட்டே இருக்கும். அதே மாதிரி சினிமாவில் இனிமேல் அடுத்த ரஜினி நான்தான் என்கிற காலம் எல்லாம்போச்சு. இன்னொரு சூப்பர் ஸ்டார் வரவே முடியாது. நிரந்தர நம்பர் 1 எல்லாம் இனி இருக்காது. படம்நல்லாயிருந்தா மட்டும்தான் இனிமே ஜனங்க ரசிப்பாங்க.... நல்லா இல்லையா விட்டுருவாங்க.

காலமும், ஜனங்களும் மாறிக்கிட்டே இருக்காங்க! அதுக்கு ஏற்ப மாறினால்தான் நல்லது. எம்.ஜி.ஆர்., சிவாஜி,ரஜினி, கமல் எல்லாம் இருபது, முப்பது வருஷமா சினிமாவில் இருந்தாங்கன்னா அது அந்தக் காலம். இப்ப அந்தடிரெண்ட் மாறிப்போச்சு.

நான் கமல் சார் மாதிரி, ரஜினி சார் மாதிரி 30 வருஷம் சினிமாவில் இருப்பேன்னு நினைச்சா என்னை விட ஒருமுட்டாள் இருக்கவே முடியாது.

இன்னைக்கு எடுக்கப்படுகிற படங்களோட கதை, ஸ்கிரிப்ட் எல்லாம் பார்த்தா ஒரு ஹீரோவோட லைப் பதினைஞ்சுவருஷம்தான். இந்தக் காலத்துக்குள்ளே தான் அவன் சாதிக்கிற விஷயத்தை எல்லாம் சாதிச்சு ஆகணும். ஒரு சிலர்தேவை இல்லாம நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. நடிகன் ஒரு படத்தில நடிக்கிறான்.

அதைப் பார்த்துட்டு நல்லாயிருக்கு நால்லாயில்லைன்னு சொல்லலாம். அதை விட்டுட்டு அந்த நடிகனிடம்நாட்டைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? சமுதாயத்துக்கு என்ன பண்ணப் போறீங்க? இந்த மாதிரி கேள்விகேட்கக் கேட்க, அந்த நடிகனுக்கு கர்வம் அதிகம் ஆயிடுது.

அடுத்த முதல்வர் வரை கனவு காண ஆரம்பிக்கிறான். நான் சொல்றது என்னன்னா... ஒரு நடிகனை நடிகனாகமட்டும் பாருங்க... நடிகனிடம் என்ன கேள்வி கேட்கணுமோ அதை மட்டும் கேளுங்க... நாட்டைப் பற்றிநடிகன்கிட்ட கேட்டா எப்படி? அதை கவனிக்க அரசாங்கம் இருக்கு. என்னைக்கு சினிமாகாரங்க அவங்கவங்கவேலையைக் கவனிச்சுட்டுப் போறாங்களோ, அப்பதான் சினிமா நல்லா இருக்கும்.

என்னையும் சேர்த்து தான் சொல்றேன். நான் ரேஸ் ஓட்டுறேன். உண்மை தான். அதில் நான் சாதிக்கிற வரைக்கும்ரேஸ் ஓட்டுறதை நான் விடப் போறதில்லை. அதில்தான் நான் இப்ப தீவிரமா இருக்கேன்.

பதிமூணு வருஷமா கார் ரேசை மறந்துட்டு சினிமாவில இருந்தேன். அந்த பதிமூணு வருஷத்தில ஒவ்வொருநாளும் ரேஸ் பார்க்கும் போது வேதனைப்பட்டுத் தான் தூங்குவேன். இன்னைக்கு ஆண்டவனே அந்த வாய்ப்பைஎனக்கு தர்ற்ப்ப, எந்த நாய்க்கும் அதைத் தடுக்கிற உரிமை கிடையாது.

எதிலுமே நமக்குக் கிடைக்கிற பேர், புகழ், பணம், மரியாதை, அந்தஸ்து எல்லாமே நாம கொடுக்கிற வெற்றியைப்பொறுத்துதான்! இன்னிக்கு நான் சச்சின் டெண்டுல்கரோட ரசிகன்னு வச்சிக்கங்களேன். அவர் நல்லா ஆடுகிறார்என்பதற்காகத்தான் நான் அவரோட ஃபேன்!

நாம வெற்றியைக் கொடுத்தால் தான் ரசிகர்கள். ரசிகர்கள் இருப்பதால்தான் நான் வெற்றியைக் கொடுக்கிறேன்என்பதில்லை.

கடந்த 10 வருஷத்தில் வைத்து சொல்பட்ட அனுபவத்தை வைத்து சொல்கிறேன். காசு கொடுத்து தியேட்டருக்குவரும் ஜனங்கள் போகும் போது சந்தோஷத்தோடு திருப்தியோடு போகணும். அதனால்தான் ஒரு படம்கொடுத்தாலும் ஒழுங்கா கொடுக்கணும் என்று நினைத்து, படங்களில் முழு இன்வால்வ் மென்ட் கொடுப்பதற்காகஇனி வருடத்துக்கு இரண்டு படம் தான் பண்ணப் போறேன்.

இதில் தெளிவா இருக்கேன். இது பர்சனலா எடுத்த முடிவு. அது ஹிட் ஆனாலும் சரி, இல்ல அடிமட்டத்துக்குப்போனாலும் சரி... வருடத்துக்கு இரண்டு படம் தான்.

அதில எந்த மாற்றமும் கிடையாது. இப்ப கூட இந்த வருஷம் அட்டகாசம், மகா. இந்தப் படங்களை முடிக்கிறவரைக்கும் நான் எந்த தயாரிப்பாளர்கிட்டயும் அட்வான்ஸ் வாங்கப் போறதில்லை. நிம்மதியா சினிமாவில வேலைசெய்ய விடுங்க.

இண்டஸ்ட்ரிக்கி வருவதற்காக நான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் என்பது எனக்கும் என் குடும்பத்திற்கும்மட்டும்தான் தெரியும். படங்கள் வெற்றி அடைஞ்ச பிறகுதான் எல்லோரும் வந்தாங்க. நான் கஷ்டப்படும்போது,கம்பெனி கம்பெனியா கம்மியா சம்பளத்துக்கு நடிச்சு ரொம்ப கஷடப்பட்டேன். அப்போது யாரும் எனக்கு தங்கத்தாம்பளத்தில் வச்சு தூக்கிக் கொடுக்கல. பிடுங்க வேண்டியிருந்தது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil