ரசிகர்களால் கைகளில் ஒரே ரத்தம்.. மகன் அழுகை.. அஜித் பகிர்ந்த ஷாக் சம்பவம்.. ஏகேவுக்கே இப்படியா?

சென்னை: சினிமாவில் மட்டுமின்றி கார் ரேஸிலும் தற்போது அதிக கவனம் செலுத்திவருகிறார் அஜித். அதுமட்டுமின்றி கார் ரேஸை பிரபலப்படுத்தும் நோக்கில் நீண்ட வருடங்கள் கழித்து அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்துவருகிறார். நேற்று கொடுத்த பேட்டியில் கரூர் துயர சம்பவம் பற்றி பேசிய அவர்; தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருக்கும் அஜித்குமார்; தனது ரசிகர்கள் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெடுபவர். மங்காத்தா சமயத்தில் தனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தனக்கென இருந்த ரசிகர் மன்றங்களை அதிரடியாக கலைத்தார். அப்படி கலைத்தபோது இனி அவர் படங்களுக்கு ஓபனிங்கே வராது என்றுதான் பலரும் கணித்தார்கள். ஆனால் அதற்கு பிறகுதான் ஓபனிங் பன்மடங்கு அதிகரித்தது.

அஜித்தின் செயல்: அதேபோல் தன்னுடைய ரசிகர்கள் பொதுவெளிகளில் அநாகரீகமாக நடந்துகொண்டாலோ, மற்றவர்களுக்கு தொந்தரவு தரும் செயல்களை செய்தாலோ சகோதர ஸ்தானத்தில் இருந்து ஒழுங்குப்படுத்துபவர். சமீபத்தில்கூட திருப்பதிக்கு சென்றபோது அவரை பற்று சிலர் கத்தினார்கள். உடனே இப்படியெல்லாம் செய்யக்கூடாது என சைகை மூலம் கட்டுப்படுத்தினார். அதேதான் ஸ்பெயின் கார் ரேஸ் சர்க்யூட்டிலும் நடந்தது.

Ajith Opens Up About Painful Fan Incident Shares Emotional Experience in Latest Interview

ரசிகர்களுக்கு அட்வைஸ்: இது ஒருபக்கம் இருக்க அசல் படத்திலிருந்தே பேட்டிகள் கொடுப்பதை பெரும்பாலும் நிறுத்திவிட்டார் அவர். தற்போது இந்தியாவில் கார் ரேஸை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டிகளை கொடுத்துவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில், "விஜய் வாழ்க, அஜித் வாழ்க என்று சொல்கிறீர்கள். எப்போது நீங்கள் வாழப்போகிறீர்கள்" என நெத்தியடியாக பேசி ரசிகர்களுக்கு சூப்பர் அட்வைஸையும் செய்ய தவறவில்லை.

தற்போதைய பேட்டி: இந்நிலையில் நேற்று தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "2005ஆம் ஆண்டு ரசிகர்கள் சந்திக்க விரும்பியதால் நானும் சந்தித்தேன். அவர்களை சந்தித்தபோது அவர்களுக்கு கை கொடுத்துவிட்டு காரில் ஏறினேன். அப்போதுதான் கவனித்தேன். எனது கைகள் முழுவதும் ரத்தம். எனது கையை பிளேடால் கீறிவிட்டர்கள். ரொம்பவே எனக்கு அது வலித்தது.

மகன் அழுகை: அதுமட்டுமின்றி என்னால் இந்தியாவில் கார் ஓட்ட முடியாது. அப்படி ஓட்டினால் என்னை பின் தொடர்ந்து பலர் வருவார்க்ள். அது விபத்துக்கு வழிவகுத்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த முடியும். மேலும் என் மகன் என்னிடம் ஏன் அப்பா மற்ற அப்பாக்களை போன்று நீங்கள் என்னை பள்ளிக்கு அழைத்து செல்ல மறுக்கிறீர்கள் என்றும் கேட்பான்" என தனது வாழ்வில் நடந்த மோசமான மற்றும் வலியான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இந்தப் பேட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X