அஜித்தின் ஆட்டோகிராஃப்பை பார்த்திருக்கீங்களா...செம வைரலாகும் ஃபோட்டோ

சென்னை : ஒரு நடிகராக மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அஜித். திறமை, எளிமை, சொந்த முயற்சியில் முன்னேறியது என வகையிலும் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கக் கூடியவர் அஜித்.

பொது இடங்களில் தோன்றுவதை பெரிதும் தவிர்ப்பவர் அஜித். அதே சமயம் தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை மதித்து அவர்களை சந்தித்து, அவர்களுடன் பேசுவது, ஃபோட்டோ எடுத்துக் கொள்வது ஆகியவற்றை செய்யவும் அஜித் தவறுவதில்லை.

அஜித்தின் ஆட்டோகிராஃப்

அஜித்தின் ஆட்டோகிராஃப்

அதே போல் ஒரு ரசிகருக்கு சமீபத்தில் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்ல, அஜித்திடம் ஆட்டோகிராஃப் வாங்கும் அதிர்ஷ்டமும் கிடைத்துள்ளது. அதில் லவ் என எழுதி, கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார் அஜித். மிக அரிதான அஜித்தின் ஆட்டோகிராஃப் ஃபோட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி, டிரெண்டிங் ஆகி உள்ளது.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள வலிமை படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் BTS ஃபோட்டோ, எக்ஸ்க்ளூசிவ் ஃபோட்டோக்கள் வெளியாகி வைரலாகின.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், முதல் டீசர் க்ளிம்ப்ஸ் வெளியாகி யூட்யூப்பில் சாதனை படைத்து விட்டது. இந்நிலையில் படக்குழுவினர் அடுத்து என்ன வெளியிடப் போகிறார்கள், படத்தின் ரிலீஸ் தேதியை எப்போது உறுதி செய்வார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

அடுத்த படங்களின் பேச்சுவார்த்தை

அடுத்த படங்களின் பேச்சுவார்த்தை

அஜித்தின் 61 வது படமான தல 61 படத்தையும் ஹச்.வினோத் தான் இயக்க போகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க போகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அடுத்த ஆண்டு துவங்கப்பட உள்ளது. இதற்கிடையில் தல 62 படம் பற்றிய பேச்சுவார்த்தையும் துவங்கப்பட்டுள்ளது. தல 62 படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது.

Recommended Video

Vivek சார்கூட நடித்த அனுபவம் | Actress Keerthana P-03 |Rewind Raja | Filmibeat Tamil Filmibeat Tamil
அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் நடித்த எந்த படமும் ரிலீஸ் ஆகாததால், வலிமை படத்தின் ரிலீசுக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து முடிக்க அஜித் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X