»   »  படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாஸன் போட்டோ ஷூட்... சுட்டுத் தள்ளிய அஜீத்!

படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாஸன் போட்டோ ஷூட்... சுட்டுத் தள்ளிய அஜீத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேமராவில் தன் கைவண்ணத்தைக் காட்டுவதில் அஜீத் ஒரு நிபுணர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை அல்லது சக நடிகரை படம்பிடித்துத் தருவது அவரது வழக்கம்.

முன்பு பெங்களூரில் நடந்த விமானக் கண்காட்சியை அவர் படமெடுத்த விதம், புகைப்பட நிபுணர்களை அசர வைத்தது.

அப்புக்குட்டிக்காக

அப்புக்குட்டிக்காக

சமீபத்தில் அப்புக்குட்டியை வைத்து ஒரு மிகப்பெரிய போட்டோ ஷுட் நடத்தினார். அஜீத் முதன்முறையாக எடுத்த அந்த போட்டோ ஷுட்டில் அப்புக்குட்டியை வெவ்வேறு கெட்டப்புகளில் படம்பிடித்து, அவரை மிகவும் அழகாக காண்பித்திருந்தார்.

அடுத்த போட்டோ ஷூட்

அடுத்த போட்டோ ஷூட்

அப்புக்குட்டியை வைத்து அஜித் எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. அவரை சே குவேரா போல கெட்டப் போட வைத்து படமாக்கியதோடு, அப்புக்குட்டியை சிவபாலன் என்ற இயற்பெயரில் தொடர வைத்தார் அஜீத். இதைத் தொடர்ந்து தற்போது, இவர் நடித்துவரும் படத்திலும் அஜீத் ஒரு புகைப்பட கலைஞராக மாறியுள்ளார்.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

சமீபத்தில் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பின்போது, அஜித் நடிகை ஸ்ருதிஹாஸனை வைத்து படப்பிடிப்பிலேயே ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். ஸ்ருதி ஹாஸனை வெவ்வேறு கோணங்களில் அஜீத் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

பப்ளிசிட்டி

பப்ளிசிட்டி

அஜித் எடுக்கும் நடிகர் அல்லது நடிகைகளின் புகைப்படங்களை விட, அவர் புகைப்படம் எடுக்கும் அழகே மிகவும் ஸ்டைலாக இருப்பதால், அந்தப் படங்கள் வேகமாகப் பரவி வருகின்றன.

இத்தாலியில்

இத்தாலியில்

அஜீத் - ஸ்ருதி படப்பிடிப்பு இப்போது இத்தாலியில் நடந்து வருகிறது. இந்த போட்டோஷூட்டும் அங்கு வைத்துதான் நடத்தப்பட்டுள்ளது.

English summary
Ajith has done a photoshoot for his co star actress Shruthi Hassan during his next movie shoot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil