»   »  இது அஜீத்தா? அம்மாடி நம்பவே முடியவில்லை: வியக்கும் கோலிவுட்

இது அஜீத்தா? அம்மாடி நம்பவே முடியவில்லை: வியக்கும் கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 படத்தின் ஸ்டில் ஒன்றில் அஜீத் செம ஃபிட்டாக இருப்பதை பார்த்து கோலிவுட் பிரபலங்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் ஏஜெண்டாக நடித்து வரும் படம் தல 57. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது.

இந்த படத்திற்காக அஜீத் ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்கிறார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின.

தல 57

தல 57

அஜீத் ஜிம்முக்கு செல்லும் செய்தி மட்டுமே தெரிந்த நிலையில் தல 57 படத்தின் ஒரு ஸ்டில்லை வெளியிட்டார்கள். அதில் அஜீத் படு ஃபிட்டாக பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளார்.

தல ரசிகர்கள்

அஜீத்தின் புதிய புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்களால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே அவரை பற்றி பேசி #Ak57#Thala57##Thala57ManiaEverywhere ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் டிரெண்டாகவிட்டனர்.

விக்ரம் பிரபு


அஜீத் சார் மீண்டும் ஃபிட்டாகியுள்ளதை பார்க்க நன்றாக உள்ளது. நான் இலக்கை அடைந்தபோது என்னை பாராட்டியவர் அவர். அவருக்கு எப்பொழுதும்போன்று என் வாழ்த்துக்கள் #Ak57 என விக்ரம் பிரபு ட்வீட்டியுள்ளார்.

ஆர்யா

தலயை சூப்பர் ஃபிட்டாக பார்க்க நன்றாக உள்ளது. சிவா சார் நன்றி என்று ஜிம் பாய் ஆர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Kollywood celebrities and Thala fans couldn't stop wondering after seeing Ajith in his fittest avatar for the movie Thala 57.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil