twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கடின முயற்சி தோற்பதில்லை!'... பெஸ்ட் உதாரணம் நம்ம 'கட்டழகன்' அஜீத்!

    By Shankar
    |

    வீரம் படத்தில் அஜீத்தும் தமன்னாவும் ஒரு டூயட் பாடுவார்கள் (தங்கமே தங்கமே...). அதில் அஜீத் தமன்னாவுக்கு சித்தப்பா மாதிரி இருப்பதாக ஏகத்துக்கும் கலாய்த்தார்கள். அதற்கான காரணமாக அஜீத்தின் தொப்பை மற்றும் தோற்றத்தைச் சொன்னார்கள். வேதாளத்திலும் இந்த மாதிரி கமெண்டுகள் சில வந்தன.

    இவர்களுக்கெல்லாம் அஜீத் தரப்பில் எந்த பதிலும் சொல்லப்படவில்லை. ஆனால் அஜீத் வேறு மாதிரி பதில் சொல்லியிருக்கிறார். கடும் உடற்பயிற்சி மூலம் உடலை ஜிம் பாடியாக்கியுள்ளார். தலைக்கு மட்டும் டை அடித்துவிட்டால் அப்படியே பதினைந்து வயது குறைந்து இருபதுகளில் உள்ள இளைஞனைப் போலத் தோற்றம் தருவார். அந்த அளவுக்கு கலக்கலாக மாறியுள்ளார் விவேகம் படத்துக்காக. சிலர் அவரது இந்த கெட்டப்பைக் கூட கேலி செய்துள்ளனர். கோயில் படத்தில் வரும் வடிவேலுவுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

    Ajith's hard work to get six pack body

    இது மிகத் தவறான மனப் போக்கு. அஜீத்தை ஒரு நடிகராகப் பார்க்க வேண்டாம். சக மனிதராகவே பாருங்கள். இந்த வயதுக்கு மேல் அவரால் உடலை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா... அதுவும் ஏற்கெனவே பல அறுவைச் சிகிச்சைகள் செய்து கொண்டவருக்கு இது சாத்தியப்படுமா? என்ற கேள்விகளை, உடைக்க அவர் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்? கடும் முயற்சி செய்து இந்த கட்டுடலைப் பெற்றுள்ள ஒரு மனிதனை, அறியாமையில் கேலி செய்வது தவறுதானே...

    உணவுக் கட்டுப்பாடு, சீரான உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் கவனமாக இருக்கும் அஜீத், ஓய்வு நேரங்களில் மனதை சாந்தப்படுத்தும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறார். அவர் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தருவது பயணங்கள். நினைத்தால் பைக்கையோ காரையோ எடுத்துக் கொண்டு, ஓரிரு நண்பர்களுடன் எங்கேயாவது பயணம் செய்வதில் அலாதி ப்ரியம் அவருக்கு. 'மனம் சாந்தமாக இருந்தால் உடல் சொல்வதைக் கேட்கும்' என்பது யோகிகளின் வாக்கு.

    தேவையில்லாமல் அஜீத்தை வைத்து மீம்ஸ் உருவாக்கிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றினால் உடம்பாவது தேறும்!

    English summary
    Hard exercises, strict diet and yoga help Ajith to get a perfect body shape for Vivegam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X