»   »  3 வார்த்தை சொன்ன அஜீத்: கண்கலங்கிய வடிவேலு

3 வார்த்தை சொன்ன அஜீத்: கண்கலங்கிய வடிவேலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் சொன்ன வார்த்தையை கேட்டு வடிவேலு கண்கலங்கிவிட்டாராம்.

எழில் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ராஜா படத்தில் வடிவேலு நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தபோது அஜீத்துக்கும், வடிவேலுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

Ajith's kind gesture makes Vadivelu emotional

இதையடுத்து அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. மேலும் நேரில் பார்த்தாலும் பேசுவது இல்லை. இந்நிலையில் வடிவேலு அரசியல் பக்கம் போய் படாதபாடு பட்டு சினிமாவை விட்டே சில காலம் ஒதுங்கியிருந்தார்.

தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள அவருக்கு ஹீரோ ஆசை வர இயக்குனர்கள் அவரை பார்த்து தெறித்து ஓடினார்கள். பின்னர் தான் காமெடியோடு நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் அஜீத் வடிவேலுவிடம் நாம் சேர்ந்து மீண்டும் படம் பண்ணலாம் என்று கூறியுள்ளாராம். ஒரு மனிதன் கஷ்டப்படும்போது அஜீத் இந்த வார்த்தைகளை கூறியதால் அதை கேட்டு வடிவேலு நெகிழ்ச்சியில் கண்கலங்கினாராம்.

English summary
Vadivelu gets emotional after Ajith told him, 'Let's do a movie together'. Ajith and Vadivelu earlier shared screen space in Raja.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil