ஃபயரான ஏகே 61 லுக்கில் ஏகே...டிரெண்டிங்கில் கலக்கும் அஜித்தின் குடும்ப போட்டோ
சென்னை : ஏகே 61 கெட்அப்பில் தனது குடும்பத்துடன் அஜித் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் டிரெண்டிங்காக இணையத்தை கலக்கி வருகின்றன. அஜித்தின் மாஸான லுக்கை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, புகழ்ந்து வருகின்றனர்.
Recommended Video
ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் இரண்டாவது முறையாக நடித்துள்ள வலிமை செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் தொடர்ந்து வலிமை படம் வசூலை குவித்து வருகிறது. ரிலீசான ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டுமே வலிமை படத்தின் வசூல் 100 கோடியை தாண்டி உள்ளதாம். உலகம் முழுவதும் வலிமை படத்தின் வசூல் 200 கோடியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த ஏகே 61 அப்டேட்
வலிமை படத்தின் கொண்டாட்டமே இன்னும் முடியவில்லை. அதற்குள் அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 அல்லது அஜித்குமார் 61 படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வர துவங்கி விட்டன. ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தில் அஜித், ஹீரோ-வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க போகிறார். இந்த படத்திற்கும் யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்க போகிறாராம்.

ஏகே 61 டைட்டில் என்ன
மார்ச் இரண்டாவது வாரத்தில் முகூர்த்த பூஜையுடன் ஐதராபாத்தில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். முதல்கட்ட ஷுட்டிங்கிற்காக சென்னை அண்ணா சாலையை ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட்டாக அமைத்து வருகிறார்கள். முகூர்த்த பூஜை அன்றே படத்தின் டைட்டிலையும் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏகே 61 படத்திற்காக அஜித் 25 கிலோ எடையை குறைக்க முடிவு செய்திருக்கிறாராம். தற்போது 10 கிலோ வரை குறைத்துள்ளாராம்.

வெள்ளை தாடியுடன் அஜித்
ஏகே 61 படத்தில் அஜித் நடிக்கும் நெடிவ் ரோலிற்கான நெகடிவ் இமேஜை சமீபத்தில் போனி கபூர் வெளியிட்டிருந்தார். கண்ணாடி, நீண்ட வெள்ளை தாடி என அஜித் காட்சி அளிக்கிறார். இதே கெட்அப்பில் காதில் சிறிய வளையத்துடன் சமீபத்தில் சென்னையில் ஓட்டல் ஒன்றிற்கு அஜித் வந்திருந்த போட்டோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.

அசத்தலான அஜித்தின் குடும்ப போட்டோ
தற்போது இதே கெட்அப்பில் தனது குடும்பத்துடன் அஜித் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அஜித், தனது குடும்பத்துடன் ஓட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. அஜித்தின் வித்தியாசமான லுக், அசத்தலான வில்லத்தனத்திற்கான ஹேர் ஸ்டைல் ஆகியன அனைவரையும் கவர்ந்து வருகிறது.

டிரெண்டிங்கில் தெறிக்க விடும் ரசிகர்கள்
உடனடியாக #AK61 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை ட்விட்டரில் டிரெண்டிங்கும் ஆக்கி விட்டனர் அஜித்தியன்ஸ். நள்ளிரவில் இணையத்தில் பரவ துவங்கிய இந்த போட்டோக்களை அதிகம் பகிர்ந்து அஜித்தை பாராட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள். அதோடு ஏகே 61 பற்றிய அதிக தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











