காதில் கம்மல்...கண்ணாடி...ஏகே 61 லுக்கா...இணையத்தை கலக்கும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ

சென்னை : வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் செம டிரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்து விட்டு ரசிகர்களும் இது ஏகே 61 லுக்கா என கேட்டு வருகிறார்கள்.

அஜித் நடித்துள்ள வலிமை படம் கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது. வலிமை அப்டேட் கேட்டே இந்த படத்தை ரசிகர்கள் வேல்ட் ஃபேமஸ் ஆக்கி விட்டனர். கொரோனாவால் தியேட்டர் தொழில்கள் முடங்கி உள்ளதால், வலிமை வந்தால் தான் தங்களுக்கு வாழ்க்கையே என தியேட்டர் உரிமையாளர்களே சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய திரையுலகமே அதிகம் எதிர்பார்க்கும் படமாகவும் வலிமை மாறி உள்ளது.

வலிமையின் வசூல் வேட்டை

வலிமையின் வசூல் வேட்டை

பிப்ரவரி 24 ம் தேதி வலிமை உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு ஏற்பாடு செய்து வருகிறது. வலிமை ரிலீஸ் தேதி நெருங்கி வருவதாலும், ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலேயே ரூ.300 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளது என்பது போன்ற அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருவதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

ப்ரொமோஷனே இல்லையே

ப்ரொமோஷனே இல்லையே

இருந்தாலும் வலிமை படத்தின் ரிலீசுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளது. ஆனாலும் இதுவரை படக்குழு படத்திற்கான ப்ரோமோஷனை துவக்கவே இல்லை. படக்குழுவிற்கு பதிலாக ரசிகர்களே சோஷியல் மீடியாவில் வலிமை படத்திற்கு ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். ப்ரோமோஷனே இல்லாமல் ஒரு படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு, காத்திருப்பா என ஒரு பக்கம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இணையத்தை கலக்கும் அஜித் போட்டோ

இணையத்தை கலக்கும் அஜித் போட்டோ

இதற்கிடையில் ஹச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் அஜித் அடுத்தபடியாக நடிக்கும் ஏகே 61 படத்தின் ஷுட்டிங்கும் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதனால் ஏகே 61 படத்திற்கான அப்டேட்களையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது.

வித்தியாசமான லுக்கில் அஜித்

வித்தியாசமான லுக்கில் அஜித்

காதில் மின்னும் கம்மல், பெரிய கண்ணாடி, வெள்ளை தாடி, வெள்ளை தலை முடி, கருப்பு நிற கோட் அணிந்து வேற லெவல் வித்தியாசமான லுக்கில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அஜித். சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு வந்த அஜித்தை அடையாளம் கண்டுபிடித்த அங்கிருந்த ரசிகர்கள் சிலர் அஜித்துடன் போட்டோவும் எடுத்துக் கொண்டனர். இந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவிலும் பகிர்ந்துள்ளனர். இந்த போட்டோ செம டிரெண்டிங் ஆகி வருகிறது.

Recommended Video

Ajith Sir இதை சொல்லும்போது வெக்கமா வரும் !Valimai Villain First Exclusive Tamil Interview
ஏகே 61 லுக்கா

ஏகே 61 லுக்கா

இந்த பார்த்து விட்டு ரசிகர்கள் சிலர், இது ஏகே 61 லுக்கா...ஹேர் ஸ்டைல் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும். ஏன் இவ்வளவு பெரிய தாடி...கொஞ்சம் ட்ரிம் பண்ணிருக்கலாம். அஜித் மறுபடியும் காதில் கம்மல் போட ஆரம்பிச்சுட்டாரே என பல விதமாக கருத்து சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X