வலிமை முடிஞ்சது... அஜித் இப்போ என்ன லுக்கில் இருக்கிறார் தெரியுமா

சென்னை : அஜித் சமீபத்தில் தனது ரசிகர்கள், மீடியாக்கள் என யாரும் இனி தன்னை தல என அழைக்க வேண்டாம். அஜித், அஜித்குமார் அல்லது ஏகே என்று மட்டும் அழைத்தால் போதும். அடைமொழி எதுவும் வைத்து தன்னை குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

அஜித்தின் இந்த திடீர் கோரிக்கை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்ததுடன், ஏமாற்றமடையவும் வைத்தது. இருந்தாலும் அஜித்தை இதை வைத்தே சோஷியல் மீடியாக்களில் புகழ்ந்து தள்ளினர். அஜித்தின் இந்த முடிவை பிரபலங்கள் பலரும் வரவேற்றனர். அவரின் இந்த அடக்கம் தான் சினிமாவை தாண்டியும் பலருக்கும் அவரை பிடிக்க வைத்துள்ளது என கொண்டாடினர்.

வலிமை ரிலீஸ் தேதி இதுதான்

வலிமை ரிலீஸ் தேதி இதுதான்

அஜித் நடித்து முடித்துள்ள வலிமை படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். ஜனவரி 12 ம் தேதி வலிமை படம் தியேட்டர்களில் ரிலீசாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜனவரி 14 அன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

வலிமை பார்க்க எப்படி போகனும்

வலிமை பார்க்க எப்படி போகனும்

வலிமை படத்தில் இளமை தோற்றத்தில், துடிப்பான, ஜாலியான போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்துள்ளதாகவும், கதை இதுவாக இருக்குமோ என்ற உங்களின் கருத்து அல்லது கற்பனை ஏதும் இல்லாமல் பிளாங்க்கான மனதுடன் வலிமை படம் பார்க்க செல்லுங்கள் என டைரக்டர் ஹச்.வினோத்தே கூறி உள்ளார்.

அஜித் 61 கதை இது தான்

அஜித் 61 கதை இது தான்

வலிமை படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. இதில் அஜித்தின் மிரட்டலான பைக் ரேஸ் காட்சிகள் அனைவரையும் அசர வைத்தது. இந்த வீடியோவும் வைரலானது. இதற்கிடையில் அஜித்தின் அடுத்த படம் பற்றி தகவல்களும் வந்து கொண்டிருக்கிறது. ஹச்.வினோத் இயக்கத்தில் போனி தயாரிப்பில் மீண்டும் அஜித் நடிக்க உள்ள இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் குறைவாகவும், டயலாக்குகள் அதிகமாகவும் இருக்கும். அதோடு உலகம் முழுவதும் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனை பற்றி பேசுவதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அஜித்தின் தற்போதைய லுக்

அஜித்தின் தற்போதைய லுக்

வலிமை, அஜித் 61 பற்றி ரசிகர்களும், சினிமா வட்டாரங்களும் பரபரத்துக் கொண்டிருக்கையில், சமீபத்தில் தனியார் வங்கி ஒன்றிற்கு மிக எளிமையாக வந்து சென்றுள்ளார் அஜித். ப்ளூ கலர் கோட், வெள்ளை மாஸ்க் அணிந்து, தனது வழக்கமான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில், ஸ்டையிலான ஹேர் ஸ்டைல், அடர்ந்த தாடி, பெரிய மீசையுடன் கிட்டதட்ட நேர்கொண்ட பார்வை கெட்அப்பில் வந்துள்ளார்.

வைரலாகும் ஃபோட்டோக்கள்

வைரலாகும் ஃபோட்டோக்கள்

அஜித்தின் இந்த திடீர் வரவை எதிர்பாராத ரசிகர்கள், அங்கிருந்தவர்கள், மீடியாக்கள் என பலரும் அவரை சுற்றி வைத்து ஃபோட்டோ, வீடியோ எடுத்தனர். பலர் ஆர்வமாக வந்து செல்ஃபி எடுத்து தங்களின் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X