»   »  'அஜீத்தின் அடுத்த படம் மகா ஸ்டைலிஷா இருக்கும்!'

'அஜீத்தின் அடுத்த படம் மகா ஸ்டைலிஷா இருக்கும்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத் - சிவா இருவரும் இணைந்து தந்த வீரம், வேதாளம் இரண்டு படங்களுமே பக்கா மாஸ் படங்களாக அமைந்துவிட்டன.

இந்த இரண்டிலுமே மசாலா ரொம்பவே தூக்கலாக அமைந்திருந்தது. அது ரசிகர்களுக்கும் பிடித்துப் போனதால் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

ஸ்டைலிஷ் படம்

ஸ்டைலிஷ் படம்

இப்போது தனது 57 வது படத்துக்கு மீண்டும் சிவாவுடனே கூட்டு சேர்ந்துள்ளார் அஜீத்.

ஆனால் முந்தைய இரு படங்களைப் போல மசாலாவாக இல்லாமல், ஸ்டைலிஷாக படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். பில்லா படத்தில் வந்தது போல இதில் அதிக மாஸ் காட்டாமல், கதைக்கு என்ன தேவையோ அந்த அளவு மட்டுமே அஜீத் நடிப்பு இருக்குமாம்.

சத்யஜோதி

சத்யஜோதி

சத்யஜோதி நிறுவனம் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்துக்காக அஜீத் நடிக்கும் முதல் படம் இது.

ஐரோப்பா

ஐரோப்பா

ஆகஸ்டில் தொடங்கவிருக்கும் இந்தப் படம், ஐரோப்பாவின் அழகிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. வேதாளம் படம் இத்தாலியில் படமானது நினைவிருக்கலாம்.

அனிருத்

அனிருத்

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஒரு நாயகியாக ரித்திகா சிங் ஒப்பந்தமாகிவிட்டார். இன்னொரு நாயகியாக அனுஷ்கா நடிப்பார் எனத் தெரிகிறது.

Read more about: ajith, siva, சிவா
English summary
Ajith and director Siva have given two mass masala hits, Veeram and Vedhalam but their soon to be started third film (Thala 57) is said to be a stylish action entertainer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil