»   »  அஜீத்துடன் இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன்?

அஜீத்துடன் இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் அடுத்த படத்தில் அவருடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அஜீத் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான வேதாளம் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சிறுத்தை சிவாவுடன் 3 வது முறையாக அஜீத் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா

கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சிறுத்தை படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. சிறுத்தை திரைப்படம் வெற்றி பெற்றதால் சிறுத்தை என்னும் பெயர் இவருடன் ஒட்டிக் கொண்டது.

வீரம்

வீரம்

தொடர்ந்து கோட் சூட் போட்டு கெத்து காண்பித்த அஜீத்தை கிராமத்து மனிதர் மற்றும் பாசமான அண்ணனாக இவர் காட்டிய வீரம் திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றது. ஆக்ஷன்+ குடும்ப சென்டிமெண்டுடன் வெளியான வீரம் திரைப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

வேதாளம்

வேதாளம்

வீரம் வெற்றி பெற்ற பின்னர் 2 வது முறையாக அஜீத்துடன் இணைந்து வேதாளம் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். இந்த வருடத் தீபாவளிக்கு வெளியான வேதாளம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தற்போது நல்ல வசூலைக் குவித்து வருகிறது.

3 வது முறையாக

3 வது முறையாக

வீரம், வேதாளத்தைத் தொடர்ந்து 3 வது முறையாக அஜீத்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கப் போகிறார் என்று தகவல்கள் அடிபட்டு வருகின்றன. மேலும் இந்தப் படத்தில் அஜீத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகவும் கூறுகின்றனர். இன்னொரு படம் நாம சேர்ந்து பண்ணலாம் என்று சிறுத்தை சிவாவிடம் அஜீத் கூறியதும், வேதாளம் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று அஜீத் மற்றும் சிறுத்தை சிவாவை சிவகார்த்திகேயன் சந்தித்ததும் இந்த செய்தியை உறுதிப்படுத்துவது போன்று உள்ளன.

எனினும் படம் பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாகும் வரை நாம் காத்திருக்கலாம்!

English summary
After Veeram, Vedalam Director Siruthai Siva Again Team Up with Ajith. Sources Said Siruthai Siva Now Plans Ajith and Sivakarthikeyan to cast in this Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X