»   »  நடிகர் அஜீத்திற்கு அறுவைசிகிச்சை... 9 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் ஆலோசனை

நடிகர் அஜீத்திற்கு அறுவைசிகிச்சை... 9 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜீத்தின் வலது முழங்கால் மற்றும் வலது தோள்பட்டையில் வருகின்ற 24ம் தேதி ஆபரேஷன் நடைபெற இருக்கிறது.

Select City
Buy Vedalam (U) Tickets

ஆரம்பம் படப்பிடிப்பின் போது அஜீத்தின் வலது முழங்கால் மற்றும் வலது தோள்பட்டையில் கார் துரத்தும் காட்சியின் போது கடுமையாக அடிபட்டது.


Ajith's Operation Coming 24th

உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர் டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப்பின், அவர் குணம் அடைந்து தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.


இந்நிலையில் அவருடைய முழங்காலிலும், தோள் பட்டையிலும் அவ்வப்போது வலி இருந்து கொண்டிருந்தது. வலி இருந்த பகுதிகளில் டாக்டர்கள் ‘ஸ்கேன்' எடுத்துப் பார்த்து, ‘ஆபரேஷன்' செய்து கொண்டால்தான் முழுமையாக குணம் அடைய முடியும் என்று கூறினார்கள்.


தொடர்ந்து படப்பிடிப்புகள் இருந்ததால் உடனடியாக ‘ஆபரேஷன்' செய்து கொள்ள அஜித்தால் முடியவில்லை. இந்த நிலையில் அவர், ‘வேதாளம்' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தபோது, ஏற்கனவே அடிபட்ட இடத்தில் மீண்டும் அடிபட்டதால், வலி தாங்காமல் துடித்தார்.


மீண்டும் மருத்துவமனைக்கு சென்றபோது டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து உடனடியாக ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.


டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அஜித்திற்கு வருகிற 24-ந் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் நடக்கிறது.


இந்த ஆபரேஷனாது அவருடைய வலது முழங்காலிலும், தோள் பட்டையிலும் நடைபெற இருக்கிறது. ஆபரேஷனுக்குப்பின், அஜித்குமார் 9 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.


அதன்படி அவர் சென்னையில் 9 வாரங்கள் ஓய்வு கொண்ட மேற்கொண்ட பிறகு லண்டன் சென்று சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்து இருக்கிறார்.


இதனால் வேதாளம் படத்திற்குப் பின்னர் வேறு புதிய படங்கள் எதையும் அஜீத் ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Ajith Kumar Makes a Major Surgery for Coming 24th. Ajith Starrer Vedalam will be Released on November 10 for Diwali Festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil