அடி தூள்...படுமாஸாக அசத்தும் அஜித்...வலிமை நியூ ஸ்டில்ஸ் வெளியீடு

சென்னை : அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் மாஸான புதிய ஸ்டில்களை டைரக்டர் ஹச்.வினோத் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்களை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.

டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் கார்த்திகேயா, யோகிபாபு, ஹுமா குரேஷி, சுமத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படம் சட்ட விரோத பைக் ரேஸ், போதை கடத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

வலிமை பொங்கல் ரிலீஸ்

வலிமை பொங்கல் ரிலீஸ்

வலிமை படம் பொங்கல் தினமான ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. வலிமை படத்தில் அதிக ஆக்ஷன் காட்சிகள் உள்ளதால் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்று வழங்கி உள்ளது. இந்த படம் இரண்டு மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடுகிறதாம்.

இத்தனை கோடி வியாபாரம்

இத்தனை கோடி வியாபாரம்

சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் வலிமை படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே டிஜிட்டல், சேட்டிலைட், இசை, தியேட்டர் வெளியீடு என அனைத்து உரிமங்களும் சேர்த்து ரூ.161 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

விடாமல் அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

விடாமல் அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

இதுவரை வெளியிடப்பட்ட வலிமை படத்தின் ஃபஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், ஃபஸ்ட் சிங்கிள், டீசர் க்ளிம்ப்ஸ், செகண்ட் சிங்கிள், விசில் தீம் என அனைத்தும் செம ஹிட்டாகி, புதிய சாதனை படைத்தது. இருந்தாலும் வலிமை அப்டேட் கேட்பதை அஜித் ரசிகர்கள் இன்னும் நிறுத்தவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் வலிமை டிரைலரை எப்போது வெளியிட போகிறீர்கள் என கேட்டு வந்தனர்.

டிரைலர் ரிலீஸ் எப்போ

டிரைலர் ரிலீஸ் எப்போ

இந்நிலையில் இந்த வாரம், புத்தாண்டை முன்னிட்டு வலிமை டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுவதற்காக அவ்வப்போது, வலிமை படத்தின் ஒர்க்கிங் வீடியோ, அஜித்தின் மாஸ் ஸ்டில்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றை தொடர்ந்து வலிமை படத்தின் புதிய ஸ்டில்களை இன்று டைரக்டர் ஹச்.வினோத் வெளியிட்டுள்ளார்.

புதிய ஸ்டில்கள் வெளியீடு

புதிய ஸ்டில்கள் வெளியீடு

மாஸான அஜித்தின் இந்த ஸ்டில்கள் அதிக அளவில் பகிரப்பட்டும், லைக்குகளை அள்ளியும் வருகின்றன. இதனையடுத்து #ValimaiTrailer என்ற ஹாஷ்டேக்கும் வெளியிடப்பட்டு, ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. வலிமை டிரைலர் மட்டுமல்ல வலிமை படமும் அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் படி வியாழக்கிழமையிலேயே வெளியிடப்பட உள்ளனவாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X