»   »  இத்தனை பிரச்சனையிலும் சிக்ஸ் பேக், அஜீத் சார் ஒரு இன்ஸ்பிரேஷன்: ராகவா லாரன்ஸ்

இத்தனை பிரச்சனையிலும் சிக்ஸ் பேக், அஜீத் சார் ஒரு இன்ஸ்பிரேஷன்: ராகவா லாரன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதுகு வலி இருந்தும், பல அறுவை சிகிச்சைகள் செய்தும் அஜீத் சிக்ஸ் பேக் வைத்துள்ளதை பார்த்து நடிகர் ராகவா லாரன்ஸ் வியந்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்திற்கு விவேகம் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் சிக்ஸ் பேக்குடன் மிரட்டலாக காணப்படுகிறார்.


முதல்முறையாக அவர் மெனக்கெடுத்து சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.


கோலிவுட்

கோலிவுட்

முதுகு வலி, கால் வலியுடன் அவதிப்படும் அஜீத் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளவர். அப்படி இருந்தும் அவர் மன உறுதியுடன் செயல்பட்டு சிக்ஸ் பேக் வைத்துள்ளதை ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டியுள்ளனர்.


ராகவா லாரன்ஸ்

நண்பர்களே, ரசிகர்களே! விவேகம் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது தான் பார்த்தேன். அஜீத் சாரை சிக்ஸ் பேக் லுக்கில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


பிரார்த்தனை

பிரார்த்தனை

முதுகு வலி பிரச்சனை உள்ளது, அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் நடந்தும் அவர் சிக்ஸ் பேக் லுக்கிற்கு மாறியுள்ளார். அஜீத் சார் பலருக்கு இன்ஸ்பிரேஷன். விவேகம் வெற்றி பெற ராகவேந்திரா சாமியை பிரார்த்திக்கிறேன் என ராகவா லாரன்ஸ் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.


அஜீத்

அஜீத்தின் சிக்ஸ் பேக் லுக்கை பார்த்து என்ன நினைக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் ட்விட்டரில் கேட்டார். அதற்கு ஷாருக், ஆசம் என்று பதில் அளித்துள்ளார்.


English summary
Actor Raghava Lawrence said that 'Ajith has back problems, he has undergone so many operations in the past yet he has managed to transform into a fit six pack look. Ajith sir is an inspiration to many.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil