தாஜ் மஹாலில் அஜித்...தாறுமாறாக வைரலாகும் ஃபோட்டோஸ்

ஆக்ரா : ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Recommended Video

Valimai Update | Yuvan Shankar Raja Interview | U1 Records | Tamil Filmibeat

இருந்தாலும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர். அவர்களை திருப்திப்படுத்துவதற்காக முன்கூட்டியே வலிமை டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் டீசர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் கன்ஃபார்ம் செய்யப்படும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ரஷ்யாவில் பைக் ட்ரிப்

ரஷ்யாவில் பைக் ட்ரிப்

ரஷ்யாவில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கை முடித்த பிறகு, படக்குழு மட்டும் தான் இந்தியா திரும்பியது. ஆனால் அஜித் , ரஷ்யாவில் 5000 கி.மீ., உள்ளடக்கிய பைக் டிரிப்பிற்கு கிளம்பி விட்டார். பைக் ட்ரிப்பை முடித்த பிறகே அஜித் இந்தியா திரும்பி உள்ளார். அஜித் இது போல் டிரிப் கிளம்புவது புதிதல்ல. சமீபத்தில் கூட ஐதராபாத்தில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சைக்கிளிங் சென்ற ஃபோட்டோக்கள் வைரலாகின.

 தாஜ்மஹாலில் அஜித்

தாஜ்மஹாலில் அஜித்

வலிமை பட ஷுட்டிங் நடக்கும் போதும் பல முறை அஜித் பைக் ட்ரிப் போய் உள்ளார். வலிமை படத்தை முடித்த பிறகு அஜித் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் அஜித், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க வந்த ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 வேகமாக பகிரம் ரசிகர்கள்

வேகமாக பகிரம் ரசிகர்கள்

மிக எளிமையாக பேண்ட் - டி ஷர்ட் அணிந்து அமர்ந்திருந்த அஜித்தை அடையாளம் கண்டுபிடித்த ரசிகர்கள் சிலர் அவரிடம் சென்று பேசி, அவருடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த ஃபோட்டோக்களை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

 குவியம் கமெண்ட்கள்

குவியம் கமெண்ட்கள்

இந்த ஃபோட்டோவை பார்த்த சிலர், ஒரு அதிசயமே மற்றொரு அதிசயத்தை பார்க்க சென்றுள்ளது என உணர்ச்சி பொங்க கமெண்ட் செய்துள்ளனர். இந்த ஃபோட்டோவை பகிர்ந்தவருக்கு அஜித் ரசிகர்கள் பலர் நன்றி சொல்லி வருகின்றனர்.

துப்பாக்கி சுடுதல் போட்டி

துப்பாக்கி சுடுதல் போட்டி

வலிமை படத்தை முடித்த பிறகு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக பயிற்சி எடுப்பதில் அஜித் கவனம் செலுத்தி வருகிறார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்வதற்காக அஜித் டெல்லி சென்ற போது தான், ஓய்வு நேரத்தில் ஆக்ராவிற்கு தாஜ்மஹாலை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.

விரைவில் தல 61

விரைவில் தல 61

துப்பாக்கி சுடுதல் போட்டிகளை முடித்த பிறகு தல 61 படத்தின் வேலைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் துவக்க அஜித் திட்டமிட்டுள்ளாராம். வலிமை படம் இரண்டு ஆண்டுகளாக தாமதமானதால் அடுத்த படங்களை மிக குறுகிய காலத்தில் நடித்து முடித்து, ரிலீஸ் செய்ய அஜித் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X