»   »  விஷ்ணுவர்த்தன், சிறுத்தை சிவாவுடன் 3 வது முறையாக கைகோர்க்கும் அஜீத்... தெறிக்க விடுவாரா?

விஷ்ணுவர்த்தன், சிறுத்தை சிவாவுடன் 3 வது முறையாக கைகோர்க்கும் அஜீத்... தெறிக்க விடுவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் நடிகர் அஜீத் அடுத்தடுத்து ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

வேதாளம் படத்தின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் நடிகர் அஜித்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சைக்கு கட்டாயம் 6 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதால் அவர் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

அஜீத்

அஜீத்

வேதாளம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது நடிகர் அஜீத்திற்கு காலில் அடிபட்டது. இதனால் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அறுவைசிகிச்சை மேற்கொண்டு தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

2 படங்கள்

2 படங்கள்

இந்நிலையில் தற்போது ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க அஜீத் திட்டமிட்டு இருக்கிறார். சிறுத்தை சிவாவுடன் ஒரு படத்திலும், விஷ்ணுவர்த்தனுடன் ஒரு படத்திலும் இணைய அஜீத் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் படத்தை தீபாவளிக்கு முடித்துக் கொடுக்கும் வகையில் தனது கால்ஷீட்டை அஜீத் ஒதுக்கிக் கொடுக்க இருக்கிறாராம். வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜீத் - சிறுத்தை சிவா இருவரும் 3 வது முறையாக இந்தப் படத்தின் மூலம் இணைவது குறிப்பிடத்தக்கது.இதில் வீரம் 2014 ம் ஆண்டு பொங்கலுக்கும், வேதாளம் கடந்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகி வெற்றி பெற்றது. 2 படங்களிலும் செண்டிமெண்ட்டை நம்பிய சிவா இதிலும் அதனைத் தொடருவாரா? என்பது தெரியவில்லை.

விஷ்ணுவர்த்தன்

விஷ்ணுவர்த்தன்

ஏற்கனவே பில்லா, ஆரம்பம் போன்ற படங்களில் விஷ்ணுவர்த்தனுடன் இணைந்த அஜீத் இந்தப் படத்தின் மூலம் 3 வது முறையாக அவருடன் இணைகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படத்தை திரைக்கு கொண்டுவரும் வகையில் அஜீத் தனது கால்ஷீட்களை ஒதுக்கிக் கொடுக்க இருக்கிறாராம். பில்லா, ஆரம்பம் வகையில் இதுவும் ஆக்ஷன் படமா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.

மே முதல்

மே முதல்

வருகின்ற மே மாதம் முதல் 2 படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி, மாறி நடித்துக் கொடுக்க அஜீத் முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர். இந்த வருடத்தில் என்னை அறிந்தால், வேதாளம் என்று 2 படங்கள் அஜீத் நடிப்பில் வெளியாகின. இதில் என்னை அறிந்தால் ஓரளவு வெற்றிப் படமாகவும், வேதாளம் மிகப்பெரிய ஹிட் படமாகவும் அமைந்தது. இதனால் இனிமேல் வருடத்திற்கு 2 படங்களில் நடிப்பது என்ற முடிவிற்கு அஜீத் வந்திருக்கிறாராம். அதன் வெளிப்பாடுதான் இந்த வேகம் என்கிறார்கள்.

சால்ட் அன்ட் பெப்பர்

சால்ட் அன்ட் பெப்பர்

மங்காத்தா தொடங்கி ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் வேதாளம் என்று வரிசையாக 'சால்ட் அன்ட் பெப்பர்' லுக்கிலேயே அஜீத் நடித்து வருகிறார். இனிமேல் நடிக்கும் படங்களிலாவது இதனை மாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Sources Said Ajith to do two projects Simultaneously, one with Siruthai Siva and the other one with Vishnuvardhan.The official Announcement will be Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil