தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்...எப்போ நடக்குது தெரியுமா

சென்னை : படத்தில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் பைக் மற்றும் கார் ரேஸ், ஃபோட்டோகிராஃபி, துப்பாக்கிச் சுடுதல், ஏரோ மாடலிங் போன்ற பல துறைகளில் தீராத காதல் கொண்டவர் நடிகர் அஜித். வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி, அந்த துறைகளில் தனது திறமையை தொடர்ந்து வளர்த்தும் வருகிறார்.

கார், பைக் ரேஸ்கள் பலவற்றில் கலந்து கொண்டு சாதனை படைத்த அஜித், சமீப காலமாக துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். ஷுட்டிங்கிற்கு இடையே கொஞ்சம் கேப் கிடைத்தாலும் சென்னை வந்து, துப்பாக்கிச் சுடுதல் கிளப்பில் பயிற்சியை தொடங்கி விடுவார் அஜித்.

6 பதக்கங்களை வென்ற அஜித்

6 பதக்கங்களை வென்ற அஜித்

கடந்த ஆண்டு நடந்த 46 வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கங்களை வென்றார் அஜித். இதைத் தொடர்ந்து அடுத்த லெவல் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் அஜித் ஈடுபட்டு வந்தார்.

வைரலான பயற்சி ஃபோட்டோ

வைரலான பயற்சி ஃபோட்டோ

சமீபத்தில் ஐதராபாத்தில் வலிமை ஷுட்டிங் முடித்து, ரஷ்யா புறப்படுவதற்கு முன் கிடைத்த நேரத்தில் சென்னை துப்பாக்கிச் சுடுதல் கிளப்பில் பயிற்சி எடுத்துக் கொண்டார். இந்த ஃபோட்டோக்கள், வீடியோக்கள் சோஷில் மீடியாவில் வெளியாகி டிரெண்டிங் ஆகின.

தேசிய அளவிலான போட்டியில் அஜித்

தேசிய அளவிலான போட்டியில் அஜித்

இந்நிலையில் தற்போது தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாராம் அஜித். இந்த போட்டி வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாம். இதற்காக தான் அஜித் தீவிர பயிற்சி எடுத்து வருகிறாராம்.

ரஷ்யா ஷுட்டிங்கில் அஜித்

ரஷ்யா ஷுட்டிங்கில் அஜித்

அஜித் தற்போது வலிமை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிப்பதற்காக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அஜித் நடிக்கும் மிக முக்கியமான பைக் ரேஸ் சேஷிங் சீன்கள் எடுக்கப்பட உள்ளதாம். ஆகஸ்ட் 20 ம் தேதி துவங்கும் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு 5 முதல் 7 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே வேலை முடிஞ்சது

ஏற்கனவே வேலை முடிஞ்சது

கொரோனா பரவல் காலம் என்பதால் வெளிநாட்டு படப்பிடிப்பை சீக்கிரம் முடித்துக் கொண்டு, நாடு திரும்பியதும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்க உள்ளதாம். ஏற்கனவே டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட வேலைகளும் ஏறக்குறைய முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

அஜித்திற்காக விரைந்து நடக்கும் ஷுட்டிங்

அஜித்திற்காக விரைந்து நடக்கும் ஷுட்டிங்

செப்டம்பரில் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு அஜித் தயாராக வேண்டி இருப்பதும், வலிமை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளை சீக்கிரம் எடுத்து முடிக்கப்பட உள்ளதற்கான மற்றொரு முக்கிய காரணமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X