என்னது பைக்கில் வேர்ல்ட் டூர் போக போறாரா தல...ரகசிய பிளானை பகிர்ந்த பிரபலம்
சென்னை : வலிமை படத்தை முடித்து விட்டு, பைக்கில் ரஷ்யாவை சுற்றி வந்தார் அஜித். சமீபத்தில் சைக்கிளில் ஐதராபாத் நகரை சுற்றி வந்தார் அஜித். பைக்கில் சென்னை முதல் கொல்கத்தா வரை கூட பைக் டூர் சென்று வந்தார்.
தற்போது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக தன்னை தயார் செய்து வருகிறார் அஜித். அதோடு இந்த ஆண்டு இறுதிக்குள் அடுத்த படத்தின் வேலைகளையும் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில் 2 நாட்களுக்கு முன் ஆக்ரா சென்ற அஜித், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றார். மிக எளிமையாக அஜித் இருந்தாலும், பலர் அவரை அடையாளம் கண்டு, பேசியதுடன், அவருடன் ஃபோட்டோ, செல்ஃபி எடுத்துக் கொண்டு, அதனையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தனர். இதனை அஜித் ரசிகர்கள் பலர் வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக டெல்லியில் Maral Yazarloo வை அஜித் சந்தித்து பேசி உள்ளார். அஜித்திற்கு எதிர்காலத்தில் மோட்டர் பைக்கில் உலகை சுற்றி வரும் பிளான் உள்ளதாம். இது பற்றிய தான் Maral ஐ சந்தித்து அஜித் பேசி உள்ளார். அவரின் அனுபவங்களையும், யோசனைகளையும் கேட்டு தெரிந்துள்ளார். இந்த தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபோட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.
Maral Yazarloo, தனியாக மோட்டர் பைக்கில் உலகை சுற்றி வந்து சாதனை படைத்தனர். 7 கண்டங்கள், 64 நாடுகளை சுற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டே ஒரு லட்சத்திற்கும் அதிகமான கி.மீ.,க்கள் பைக்கில் பயணம் செய்த இலக்கை நிறைவு செய்துள்ளார். மோட்டர் பைக்கில் உலக சுற்றி வந்த போது தான் இவரின் காதலர் தனது காதலை வெளிப்படுத்தினார். பைக் பயணத்தின் போதே இவர்களின் திருமணமும் நடைபெற்றது.
கடந்த ஆண்டு வயிற்றில் குழந்தையுடன், கர்ப்ப காலத்திலும் மோட்டர் பயணத்தை தொடர்ந்துள்ளார் Maral. தற்போது இவருக்கு பெண் குழந்தை உள்ளது. 37 வயதாகும் இவர் தொடர்ந்து தனது சாதனை பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஈரான் நாட்டை சேர்ந்த இவர், பைக்கில் உலகை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











