»   »  ஜெயலலிதா அல்ல யார் சொன்னாலும் இந்த அஜீத் திருந்தவே மாட்டார்!

ஜெயலலிதா அல்ல யார் சொன்னாலும் இந்த அஜீத் திருந்தவே மாட்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 படத்திற்காக அஜீத் நீருக்கு அடியில் சண்டை காட்சியில் நடித்து வருகிறாராம்.

பல்வேறு விபத்துகளில் காயம் அடைந்த அஜீத் படங்களில் சண்டை காட்சிகளில் டூப் வைத்துக் கொள்ளாமல் நான் தான் நடிப்பேன் என்று அடம் பிடிப்பவர். மேலும் பைக், கார் சேசிங் காட்சிகளிலும் ரிஸ்க் எடுத்து நடிப்பார்.

Ajith won't change

உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகள், பைக், கார் சேசிங் காட்சிகளில் எல்லாம் நடிக்க வேண்டாம் என்று முன்பு முதல்வர் ஜெயலலிதா அஜீத்துக்கு அறிவுரை வழங்கினாராம்.

இந்நிலையில் சிவா இயக்கத்தில் தான் நடித்து வரும் தல 57 படத்திலும் சண்டைக் காட்சியில் அவரே நடிக்கிறாராம். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் நீருக்கு அடியில் நடக்கும் சண்டை காட்சியில் நடித்து வருகிறாராம்.

ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்து அஜீத் பலமுறை காயம் அடைந்துள்ளார். அறுவை சிகிச்சை செய்த பிறகு நடிக்கும் இந்த படத்திலும் அடம்பிடித்து ரிஸ்க் எடுக்கிறார்.

English summary
Ajith won't listen to his well wishers when it comes to taking risks for stunt sequences in his movies. He does it again for Thala 57.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil