»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏவி.எம். நிறுவனம் மீண்டும் ஒரு மெகா பட்ஜெட் படத்தில் இறங்குகிறது. தனுஷை வைத்து ஒரு படத்தையும், அஜீத்தை வைத்து ஒரு படமும்தயாரிக்கப் போகிறார்கள்.

விஜய்க்கு கடும் போட்டியாக திகழ்வார் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டவர் அஜீத். ஆனால் காலப் போக்கில் விஜய் முந்தி விட்டார், அஜீத்படு பாதாளத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அட்டகாசம் படம் ஓரளவுக்கு ஓடினாலும் அஜீத்துக்கு பெரிய அளவில் கைகொடுத்துவிடவில்லை. விஜய்யோ கில்லி, மதுர என்று பெரும்மெகா ஹிட்களுடன் வெற்றிப் பாதையில் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் அஜீத்துக்கு தற்போது ஒரு பெரிய பேனரில் மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தயாரிக்கப் போவதுஏவி.எம். நிறுவனம்.

இதற்கு முன் சூர்யாவை வைத்து பேரழகன் படத்தை எடுத்த ஏவி.எம்முக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. படம் மட்டுமேநன்றாகப் பேசப்பட்டது. இதனால் கொஞ்ச நாட்களாக தயாரிப்பில் இறங்காத ஏவி.எம். தற்போது ஒரே நேரத்தில் இரு படத் தயாரிப்பில்குதிக்கிறது.

எவி.எம் தயாரிக்கும் இரண்டாவது படத்தில் தனுஷ் தான் ஹீரோ. இது லோ பட்ஜெட் படமாம். அஜீத் நடிக்கும் படம் தான் மெகா பட்ஜெட்படமாம். கிட்டத்தட்ட சகலகலாவல்லவன் ரேஞ்சுக்கு அஜீத்தின் படம் இருக்கும் என்கிறார்கள்.

இந் நிலையில் தனது ரசிகர் மன்றங்களைப் பலப்படுத்தும் வேலையில் அஜீத் தீவிரமாக இறங்கியுள்ளார். முதல் கட்டமாக சென்னைசாலிகிராமம் பகுதியில் (இங்குதான் விஜய் தலைமை ரசிகர் மன்றம் உள்ளது) தனது ரசிகர் தலைமை மன்றத்தை தொடங்கியுள்ளார் அஜீத்.

அதன் திறப்பு விழா நேற்று மிகப் பிரமாண்டமாக நடந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் தலைமை மன்றத்தைத் திறந்துவைத்தார் அஜீத். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

நான் நடிக்க வந்து 12 ஆண்டுகள் ஆகி விட்டது. எனக்கென்று தமிழகம் முழுவதும் 39,000 ரசிகர் மன்றங்கள் உள்ளன. இவற்றில் பதிவுசெய்த 12 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர் மன்றங்களைப் புணரமைத்து புது ரத்தம் பாய்ச்ச முடிவு செய்துள்ளேன். இன்று முதல் எனது ரசிகர் மன்றங்கள், அஜீத் குமார் ரசிகர்கள்நற்பணி இயக்கம் என்ற பெயர் மாற்றத்தோடு இயங்கப் போகின்றன.

பெயர் மாற்றத்தை வைத்து இதை அரசியலுக்கான அஸ்திவாரம் என்று கூறக் கூடாது. அரசியல் வேறு, சினிமா வேறு. இரண்டையும்ஒன்றாகக் கலப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் வெறும் நடிகன், நடிகனாக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன்.


இனிமேல், எனது பட வெளியீட்டின்போது கட் அவுட்டிற்கு மாலை போட மாட்டார்கள். பாலாபிஷேகம் இருக்காது (விஜய்யைத்தாக்குகிறார்?). அதற்குப் பதிலாக ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் படத்தின் பெயரில் மரம் நடுவார்கள்.

அரசு நிலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வார்கள். மழை நீர் சேகரிப்பு, குப்பைகளைப் பிரித்து எடுப்பது, நீர்வளத்தைக் காப்பது,சுகாதாரத்தின் மேன்மை ஆகியவற்றை மக்களிடம் எடுத்துக் கூறுவார்கள். (புல்லரிக்குதுப்பா!). சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக எனதுபெற்றோர் பெயரில் ஒரு அறக்கட்டளையையும் தொடங்க இருக்கிறேன்.

இந்த அறக்கட்டளைக்கு எனது சம்பளத்தில் ஒரு பகுதியைத் தருவேன் என்றார் அஜீத்.

இந் நிகழ்ச்சியில் அஜீத்தின் மனைவி ஷாலினி, தாயார் மோகினி, தந்தை மணி, தலைமை மன்றத் தலைவர் ராஜா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil