»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Subscribe to Oneindia Tamil
வில்லனுக்குப் பிறகு அஜீத்திற்கு சொல்லிக்கொள்கிற மாதிரி படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. இதனால் தானோ என்னவோவில்லனை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமாரின் "காட்பாதரை அவர் மலை போல நம்பியிருக்கிறார்.

படுத்துவிட்ட எல்லா முன்னணி ஹீரோக்களும் பிரேக்குக்காக கடைசியாக புகலிடம் தேடுவது கே.எஸ்.ரவிக்குமாரிடம் தானே.அந்த வகையில் அஜீத் சரண் தேடிய இடமே ரவிக்குமா.

கொடுமையால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆபத்பாந்தவர். படத்தில் காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என எல்லாஎன்டர்டெயின்மென்ட் அம்சங்களும் உண்டு. அஜீத் ஒரு ஹேண்ட்சம் ஆக்ஷன் ஹீரோ. எல்லா வேடங்களும் அவருக்கு ஈஸியாகவரும். ஏற்கெனவே வில்லன் படத்தில் அவர் என் இயக்கத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் அஜீத்துக்கு 3 வேடங்கள். 3 வேடங்களுமே ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும். எல்லா வேடங்களிலும்அஜீத் அசத்திக் காட்டுவார் என்கிறார் ரவிக்குமார்.

தனது ஜக்குபாயை திடீரென ஓரக்கட்டிவிட்டு, வாசுவின் சந்திரமுகியில் ரஜினி நடிக்கப் போய்விட ரொம்பவே அப்செட்ஆகிவிட்ட கே.எஸ்.ரவிக்குமார் தயார் செய்துள்ள வலிமையான கதை தான் காட்பாதர்.

இந்தப் படத்தில் அஜீத் தந்தை, 2 மகன்கள் என 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். ஆனால் அதில் ஒரு வேடம்அரவாணி வேடமாம்.

அரவாணியாக நடிக்கும் அஜீத் அந்த கேரக்டர் நன்றாக வரவேண்டும் என்பதற்காக சில அரவாணிகளை ஸ்பெஷலாக வீட்டுக்குவரவழைத்து அவர்களது நடை, உடை, பாவனை என அத்தனையையும் ஸ்டடி செய்து நடித்து வருகிறாராம்.

தந்தையாக வரும் அஜீத் நடன இயக்குனராம். (அய்யோ..)

இந்தப் படத்தின் நாயகி அஸின் எப்படி என்று ரவிக்குமாரிடம் கேட்டால் அவரை ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளுகிறார்.

அஸின் ரொம்ப நல்ல நடிகை, நிறைய ஆக்டிங் டேலன்ட். கேரளத்துப் பெண்ணான அவர் ஆந்திராவில் நந்தி அவார்டுவாங்கியுள்ளார். காதல் காட்சிகளில் மட்டும் வந்து போகும் ஹீரோயினாக இல்லாமல் சென்டிமென்ட், காமெடி என எல்லாஏரியாவிலும் அஸின் இஸ் வெரிகுட் என்கிறார்.

அது சரி.. ஜக்குபாய் என்ன ஆச்சு? என்று சைக்கிள் கேப்பில் ரவிக்குமாரிடம் கேட்டு வைத்தபோது மனிதர் டென்சன் ஆகிவிட்டார்.அவரை அமைதியாக்க ரொம்பவே சிரமப்பட வேண்டி வந்தது.

ஏற்கெனவே ஜக்குபாய் பத்தி நிறைய சொல்லியாச்சு. சந்திரமுகி வெளியானதும் அறிவிப்பு வரும். அதுவரை காத்திருங்கள்என்றார் சூடு குறையாமல். வாங்கிக் கட்டியதற்கு இதமாக ஒரு ஜக்கு ஐஸ் வாட்டரை குடித்துவிட்டு வெளியே வந்தோம்.

ரவிக்குமாரின் படத்தை முடித்துவிட்டு அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிக்கப் போவது பாலாவின் இயக்கத்தில். அஜீத் என்பதால்,இதுவரை இல்லாத அளவுக்கு பாலாவே ரொம்ப டைம் எடுத்து கதையை சரி செய்து வருகிறார்.

வழக்கம்போலவே அஜீத்தின் கெட்-அப்பையும் முழுமையாக மாற்றி களமிறக்கிவிட முடிவு செய்திருக்கிறார் பாலா என்கிறதுஅவரது வட்டாரம்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக ஒரு பிரஷ் முகத்தை அறிமுகப்படுத்தவுள்ளார் பாலா. அது யார் தெரியுமா?. நடிகை கோபிகாவின்தங்கை க்ளினி தான். இதுவரை சினிமா வேண்டாம் என ஒதுங்கியிருந்த க்ளினி (போட்டோ கூட தர மறுக்கிறார்) பாலாடைரக்ஷன் அதுவும் அஜீத்துக்கு ஜோடி என்றதும் சரி சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள்.

இன்னொரு விஷயம்..

அஜீத்தை தனது படத்தில் நடிக்கக் கேட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அதில் அஜீத்துடன் தனுஷ், காதல் பரத்ஆகியோரையும் நடிக்க வைக்கப் போகிறாராம்.

போட்டியாய் உருவாகியுள்ள இரண்டு இளம் ஹீரோக்களாச்சே என்ற தயக்கமே சற்றும் இல்லாமல் அவர்களுடன் இணைந்து நடிக்கஅஜீத் ஓ.கே. சொல்லிவிட்டதாய் தகவல்.

இவ்வாறு அதிரடியாய் தனது அடுத்த சுற்றுக்கு தயாராகிவிட்டார் அஜீத்.

முன்பு பைக் விபத்து, மேஜர் ஆபரேசன், பின்னர் கார் ரேஸில் அடி மேல் அடி என பல விபத்துகளை சந்தித்த அஜீத் தினமும்சராசரியாக 20 மாத்திரைகள் வரை சாப்பிட வேண்டியுள்ளதாம். இதனால் தான் உடலின் எடை அவருக்குக் கட்டுப்பட மறுக்கிறது.

இருந்தாலும் மனிதர் விடா முயற்சிக்கு பேர் போனவராச்சே.. மாத்திரைகள் தரும் கடும் களைப்பையும் மீறி உடற் பயிற்சி, யோகாஎன பலவிதத்திலும் தன்னை தயார் நிலையிலேயே வைத்திருக்கிறார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil