»   »  அஜீத்தின் கிரீடம் ஒத்திவைப்பு

அஜீத்தின் கிரீடம் ஒத்திவைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜியால், நல்ல தியேட்டர்கள் கிடைக்காமல் அஜீத், திரிஷா நடித்த கிரீடம் படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு விட்டதாம்.

சிவாஜி படம் தமிழகத்தின் அத்தனை முன்னணி தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால், பல படங்களைத் திரையிட தியேட்டர் கிடைக்காமல் அத்தனையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான படங்கள் ஜூலை கடைசி வாரத்திற்கு மேல்தான் திரையிடப்படவுள்ளன. அஜீத்தின் கிரீடம் படம் ஜூலை 12ம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது ஜூலை கடைசி வாரத்திற்குப் படம் தள்ளிப் போயுள்ளதாம். நல்ல தியேட்டர் கிடைக்காததால்தான் படத்தை தள்ளி வைக்கும் முடிவுக்கு தயாரிப்பாளர்கள் சுரேஷ் பாலாஜியும், ஆட்லேப்ஸ் நிறுவனமும் வந்தனராம்.

தமிழகம் முழுவதும் சிவாஜி 450 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டுள்ளது.

சிவாஜி இப்படி சக்கை போடு போட்டு வருவதால் அஜீத்தின் கிரீடம், விக்ரமின் பீமா உள்பட 20 படங்கள் வரை ரிலீஸ் ஆக முடியாமல் தேங்கிக் கிடக்கின்றனவாம்.

பல தியேட்டர் காம்ப்ளக்ஸ்களில் சிவாஜி 50 நாட்களைத் தாண்டிய பின்னர்தான் கூடுதல் தியேட்டர்களிலிருந்து படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளனராம் தியேட்டர் உரிமையாளர்கள்.

சென்னையில் சிவாஜியைத் திரையிட்டுள்ள மல்ட்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், போட்ட பணத்தை திரும்ப எடுத்த பிறகுதான் கிரீடம் உள்பட மற்ற படங்களுக்கு தியேட்டர் ஒதுக்க முடியும் என்று கூறி விட்டார்களாம்.

அபிராமி மெகா மால் வளாகத்தில் உள்ள நான்கு தியேட்டர்களிலும் சிவாஜிதான் ஓடிக் கொண்டிருக்கிறது. மாயாஜாலில் உள்ள 6 திரைகளிலும் சிவாஜிதான். தினசரி 20 காட்சிகளை அவர்கள் ஓட்டிக் கொண்டுள்ளனர். வாரக் கடைசி நாட்களில் 26 காட்சிகளாம்.

கிரீடம் படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்து விட்டதாம். இன்னும் 2 நாட்களில் படம் சென்சார் ஆகி விடும். விக்ரமின் பீமாதான் கிரீடத்திற்குக் கடும் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பீமா, ஆகஸ்ட் 15ம் தேதி தான் ரிலீஸ் ஆகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil