என்னது...அஜித்திற்காக ஒரு ஊரையே இடம் மாத்துறாங்களா ?
சென்னை : அஜித் நடிக்கும் ஏகே 61 படத்திற்காக ஒரு ஊரையே வேறு இடத்தில் மாற்றி அமைக்க உள்ளதாக வெளியான தகவலால் அனைவரும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர். எதற்காக இப்படி செய்கிறார்கள் என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
அஜித்தின் மிகப் பெரிய பான் வேல்ட் படமான வலிமை ரிலீசாக இன்னும் 9 நாட்களே உள்ளது. பிப்ரவரி 24 ம் தேதி மிக பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள இந்த படத்தை வேற லெவலில் தாறுமாறாக கொண்டாட அஜித்தியன்ஸ் தயாராக இருக்கிறார்கள். வலிமை படம் முதல் நாளே வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏகே 61 ஏற்பாடுகள் தீவிரம்
அதே சமயம் அஜித், ஹச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவாகும் ஏகே 61 அல்லது அஜித் 61 படத்திற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது. பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட உள்ள ஏகே 61 படத்தில் மோகன்லால், நாகராஜுனா, அதிதி ராவ் ஹைதரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

மார்ச் 9 ல் ஏகே 61 ஷுட்டிங்
சமீபத்தில் பாலிவுட் மீடியாக்களுக்கு பேட்டி அளித்த போனி கபூர், ஏகே 61 படத்தின் ஷுட்டிங் மார்ச் 9 ம் தேதி பூஜையுடன் துவங்கப்பட உள்ளதாக கூறி உள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கப்பட உள்ளதாம். இதற்காக ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக பல நாட்களாக கூறப்பட்டு வருகிறது.

என்னது ஊரையே மாற்றுகிறார்களா
இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட செட் வேறு ஒன்றும் இல்லை, சென்னை அண்ணாசாலை (மவுண்ட் ரோடு) தான் செட்டில் அமைக்கப்பட்டு வருகிறதாம். ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஏகே 61 படத்திற்காக சென்னை அண்ணா சாலை அச்சு அசலாக உருவாக்கப்பட்டு வருகிறதாம். வலிமை படத்தின் பல சீன்கள் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தான் எடுக்கப்பட்டது. இதனால் இது அஜித்தின் ஃபேவரைட் ஷுட்டிங் ஸ்பாட்டாக மாறி வருகிறதாம்.
Recommended Video

அப்டேட்டால் ஷாக்கான ரசிகர்கள்
பொதுவாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எடுக்கப்பட வேண்டிய ஷுட்டிங்கை இடையூறு இன்றி நடத்த அதே போல் செட் அமைப்பார்கள். சமீபத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட மால் ஒன்றின் செட் அமைக்கப்பட்டது. இதுவரை ஒரு கட்டிடம் போன்றவற்றை தான் செட்டாக அமைத்தார்கள். தற்போது சென்னையில் முக்கிய இடமான அண்ணா சாலையையே ஐதராபாத்தில் கொண்டு போய் வைக்கிறார்களே என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











