twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவதூறு செய்தி பரப்புவதா..? ரூ.500 கோடி கேட்டு.. யூடியூபர் மீது நடிகர் அக்‌ஷய் குமார் வழக்கு!

    By
    |

    மும்பை: தன்னை பற்றி யூடியூபில் அவதூறாக கருத்துத் தெரிவித்தவர் மீது ரூ.500 கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார், நடிகர் அக்‌ஷய் குமார்.

    பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார். இவர் தமிழில், ரஜினி நடித்த 2.0 படத்தில் நடித்திருந்தார்.

    சமீபத்தில், ராகவா லாரன்ஸ் இயக்கிய லக்‌ஷ்மி பாம் படத்தில் நடித்திருந்தார். இது 'காஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக்.

    சிவாஜியை கலாய்த்து நிகழ்ச்சி நடத்துவதா? நடிகர் பிரபு கோபம்.. 'கலக்கப் போவது யாரு' டீம் மன்னிப்பு!சிவாஜியை கலாய்த்து நிகழ்ச்சி நடத்துவதா? நடிகர் பிரபு கோபம்.. 'கலக்கப் போவது யாரு' டீம் மன்னிப்பு!

    தனுஷுடன் அட்ரங்கி ரே

    தனுஷுடன் அட்ரங்கி ரே

    இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இப்போது பெல்பாட்டம் என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங், ஸ்காட்லாந்தில் நடந்தது. இதில் ஹூமா குரேசி, லாரா தாத்தா உள்பட பலர் நடிக்கின்றனர். இதற்கிடையே, தனுஷ், சாரா அலிகானுடன் அட்ரங்கி ரே என்ற படத்திலும் நடிக்கிறார்.

    500 கோடி அவதூறு

    500 கோடி அவதூறு

    இவர், யூடியூபர் ஒருவர் மீது ரூ.500 கோடி கேட்டு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பீகாரை சேர்ந்த யூடியூபர், ரஷித் சித்திக். சிவில் என்ஜீனியரான இவர், யூடியூபில் பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வருபவர். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து பல பிரமுகர்கள் மீது பரபரப்புகளை கூறினார்.

    ஏற்கனவே கைது

    ஏற்கனவே கைது

    இந்த விவகாரத்தில், மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அவர் மகன் ஆதித்யா தாக்கரே பற்றி தவறானக் கருத்துகளை பரப்பியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இவர், சுஷாந்த் சிங் விவகாரத்தில் நடிகர் அக்‌ஷய் குமாரையும் இழுத்து, அவதூறு தகவல்களை பரப்பினாராம்.

    பொய்யான தகவல்

    பொய்யான தகவல்

    சுஷாந்த் சிங் வளர்ந்து வருவது அக்‌ஷய்க்குப் பிடிக்கவில்லை என்றும் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி கனடா தப்பி செல்ல உதவ முயன்றதாகவும் ஆத்யா தக்கரேவை ரகசியமாக சந்தித்ததாகவும் பல பொய்யான தகவல்களை தெரிவித்து இருந்தாராம். இதையடுத்து ரூ.500 கோடி கேட்டு அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார், அக்‌ஷய்.

    English summary
    Akshay Kumar has filed a defamation suit of crores against a YouTuber who brought up his name while spreading fake news.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X