»   »  அக்ஷய் குமார் என்னைவிட 400 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்: காஜலுக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகர்

அக்ஷய் குமார் என்னைவிட 400 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்: காஜலுக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் அக்ஷய் குமார் என்னை விட 400 மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் என பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் பிசியான நடிகர்களில் ஒருவர் ரந்தீப் ஹூடா. இந்த ஆண்டு மட்டும் அவர் நடிப்பில் 4 படங்களை பார்க்கலாம். அதில் சரப்ஜித், லால் ரங்க் ஆகிய படங்கள் ஏற்கனவே ரிலீஸாகிவிட்டன.

Akshay Kumar gets four hundred times more money than me: Randeep Hooda

தோ லப்சோன் கி கஹானி மற்றும் சுல்தான் ஆகிய படங்கள் இந்த ஆண்டு ரிலீஸாக உள்ளன. இந்நிலையில் தோ லப்சோன் கி கஹானி பட செய்தியாளர்கள் சந்திப்பில் ஹூடா கலந்து கொண்டார்.

அப்போது பத்திரிகையாளர்கள் அவரை அக்ஷய் குமாருடன் ஒப்பிட்டனர். அதற்கு அவர் கூறுகையில்,

அக்ஷய் குமார் என்னைவிட 400 மடங்கு அதிக சம்பளம் வாங்குகிறார். அக்ஷய் ஒரு சிறந்த நடிகர். ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பு மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆக்ஷன் ஹீரோவாக இருந்த அவர் காமெடியில் கலக்கியதுடன் தற்போது சீரியஸான கதைகளிலும் நடிக்கிறார்.

அப்படிப்பட்டவருடன் என்னை ஒப்பிட்டதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

English summary
Bollywood actor Randeep Hooda said that Akshay Kumar gets four hundred times more money than him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil