»   »  ரயிலில் சிக்கி பலியாகவிருந்த பெண்ணை காப்பாற்றிய கான்ஸ்டபிள்: பாராட்டிய ரஜினி வில்லன்

ரயிலில் சிக்கி பலியாகவிருந்த பெண்ணை காப்பாற்றிய கான்ஸ்டபிள்: பாராட்டிய ரஜினி வில்லன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது கீழே விழுந்த பெண்ணை காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிளை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பாராட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள லோனாவாலா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் ஒருவர் இறங்கினார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

Akshay Kumar lauds constable for saving a woman's life

கீழே விழந்தவர் வழுக்கிக் கொண்டு தண்டவாளம் பக்கமாக சென்றார். இதை பார்த்து அங்கிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பவன் தாய்தே ஓடி வந்து அந்த பெண்ணை இழுத்து காப்பாற்றினார்.

இல்லை என்றால் அந்த பெண் ரயிலில் சிக்கி அடிபட்டிருப்பார். இந்த வீடியோவை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் வெளியிட்டு பவனை பாராட்டியுள்ளார்.

இது குறித்து அக்ஷய் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

துரிதமாக செயல்பட்ட லோனாவாலா காவல் நிலைய கான்ஸ்டபிள் பவன் தாய்தேவுக்கு சல்யூட் என தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor Akshay Kumar appreciated Lonavala police constable Pawan Tayde for saving a woman's life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil