»   »  'கபாலி' முதல் நாள் முதல் காட்சி பார்க்கணும் - அக்ஷய்குமார்

'கபாலி' முதல் நாள் முதல் காட்சி பார்க்கணும் - அக்ஷய்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கபாலி' முதல்நாள் முதல் காட்சியை பார்க்க விரும்புவதாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் அக்ஷய்குமார் தற்போது '2.ஓ' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படத்தை மிக அதிகமான பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. மறுபுறம் ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

இன்று 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் கலந்து கொண்டார்.

பாடல் வெளியீட்டிற்குப்பின் அக்ஷய் குமாரிடம் 'கபாலி' படத்தின் டீசரை லைக்கா நிர்வாகிகளில் ஒருவரான ராஜு மகாலிங்கம் போட்டுக் காண்பித்தார்.

டீசரைப் பார்த்த அக்ஷய்குமார் 'கபாலி 'படத்தின் முதல்நாள் முதல் காட்சியை(FDFS), சென்னையில் ரசிகர்களுடன் காண விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.

English summary
Bollywood Actor Akshay Kumar Like to Watch Kabali First day First Show in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil