2,000 கோடி ரூபாய் சொத்து.. சினிமாவே வேண்டாம் என முடிவெடுத்த பெரிய நடிகரின் மகன்.. இப்படியும் ஒருவரா?

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவருபவர் அக்‌ஷய் குமார். தமிழில் அவர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படம் வெளியானது. அப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் அவரது மகன் பற்றிய தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்‌ஷய் குமார். ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அக்‌ஷய் தமிழில் 2.0 திரைப்படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட்டான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படம் உருவானது. அதில் வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவரது நடிப்பு ஓரளவுக்கு வரவேற்பையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை நாயகன் அக்‌ஷய் குமார்: நடிப்பில் எவ்வளவுக்கு எவ்வளவு பேசப்பட்டாரோ அதே அளவு சர்ச்சைகளில் சிக்கியும் அக்‌ஷய் குமார் பேசப்படுவதுண்டு. உடலுக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா விளம்பரத்தில் அவர் நடித்ததன் மூலம் மிகப்பெரிய எதிர்வினையை சமீபத்தில் அக்‌ஷய் சந்தித்தார். இதனையடுத்து அதுகுறித்து மன்னிப்பு கேட்ட அக்‌ஷய், "ரசிகர்களின் எதிர்ப்பு அலை எனக்கு நன்றாக புரிகிறது. இனிமேல் புகையிலை பொருள்களின் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்" என தெரிவித்திருந்தார்.

சூரரைப் போற்று ரீமேக்: நிலைமை இப்படி இருக்க எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழில் வெளியாகி தேசிய விருதுகளை அள்ளி, கமர்ஷியல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட்டான சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார். தமிழில் படத்தை இயக்கிய சுதா கொங்கராதான் பாலிவுட்டிலும் இயக்கினார். சர்ஃபிரா என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலும் செய்திருந்தார். ஆனால் அக்‌ஷய் குமார் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக படத்தின் ரிசல்ட் அமைந்து தோல்வியையே சந்தித்தது.

Akshay Kumar s son Aarav has decided not to pursue cinema

Jolly LLB 3: கடைசியாக அவர் Jolly LLB 3 என்ற படத்தில் நடித்தார். சூரரைப் போற்று ரீமேக்தான் கைவிட்டது; இப்படமாவது ஹிட்டாகும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அந்தப் படமும் தோல்விதான். இதற்கிடையே அவர் நடிகை டிவிங்கிள் கண்ணாவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் மகன் ஆரவ் பாடியா பற்றி தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன தகவல்?: அதாவது பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள், நடிகைகள் அறிமுகமாவது வழக்கம்தான். ஸ்ரீதேவியின் மகள், ஷாருக்கானின் வாரிசுகள் என பலர் வந்திருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் ஆரவ் பாடியாவும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ சினிமாவைவிடவும் படிப்பில் கவனத்தை அதிகம் செலுத்தி 15 வயதிலேயே சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். மேலும் இப்போது லண்டனில் ஃபேஷன் டெக்னாலஜி படித்துவருகிறார்.

அவருக்கு சினிமா மீது சுத்தமாக ஆர்வம் இல்லையாம். அதுமட்டுமின்றி தந்தை மற்றும் தாயின் மூலம் மொத்தம் 2,700 கோடி ரூபாய் சொத்தும் இருக்கிறது. அந்த சொத்துக்கள் மீதும் ஆர்வம் காட்டாத அவர் தனக்கென தனி பாதையை போட்டு அதில் பயணம் செய்வதில்தான் மும்முரமாக இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X