»   »  வெற்றிமாறனைத் தொடர்ந்து ஏஎல்.விஜய்யும் ஜிவி.பிரகாஷை கழற்றி விட்டார்

வெற்றிமாறனைத் தொடர்ந்து ஏஎல்.விஜய்யும் ஜிவி.பிரகாஷை கழற்றி விட்டார்

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

ஏஎல். விஜய் தான் முதலில் இயக்கிய 'பொய் சொல்லப் போறோம்' படத்தைத் தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் ஜிவி.பிரகாஷையே இசையமைப்பாளராகப் பயன்படுத்தினார்.

கிரீடம், மதராசப்பட்டிணம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், இது என்ன மாயம் என தொடர்ந்து தான் இயக்கிய எல்லா படங்களுக்குமே ஜிவி.பிரகாஷையே இசையமைக்க வைத்தார். பிரபுதேவா, தமன்னாவை வைத்து இப்போது இயக்கும் தேவி படத்துக்கும் ஜிவி.பிரகாஷே இசை.

AL Vijay came out from GV Prakash alliance

ஆனால் அடுத்து ஜெயம் ரவியை வைத்து தான் இயக்கப்போகும் படத்துக்கு ஜிவி.பிரகாஷை கழற்றி விட்டுவிட்டு ஹாரிஸ் ஜெயராஜுடன் கைகோர்த்துள்ளார்.

காரணம் ஜிவி.பிரகாஷ் இப்போது அதிகம் படங்களில் நடிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார். இசையமைக்கும் படங்களுக்கு சிரத்தை எடுத்து இசையமைப்பதில்லை. எனவே ஒவ்வொரு இயக்குனராக ஜிவி.பிரகாஷை கழற்றி விடுகிறார்கள். வெற்றிமாறனைத் தொடர்ந்து அந்த வரிசையில் விஜய்யும் இணைந்துள்ளார்.

பறக்கறதுக்கு ஆசைபட்டு இருக்கறதை விட்டுராதீங்க ஜிவி!

English summary
After Vetrimaaran, now AL Vijay also came out from the alliance of GV Prakash.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil