»   »  வெளியே போ: செல்ஃபி எடுத்த மாடல்களை திட்டி விரட்டிய இளம் ஹீரோ

வெளியே போ: செல்ஃபி எடுத்த மாடல்களை திட்டி விரட்டிய இளம் ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: படப்பிடிப்பு தளத்தில் சில மாடல்கள் அனுமதி இல்லாமல் செல்ஃபி எடுத்ததால் நடிகர் அல்லு அர்ஜுன் கோபம் அடைந்து அவர்களை திட்டி விரட்டிவிட்டாராம்.

ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் தெலுங்கு படம் துவ்வடோ ஜகன்னாதம். அந்த படத்தில் வரும் திருமண நிகழ்ச்சி காட்சியை படமாக்கியுள்ளனர்.

Allu Arjun gets angry

அந்த காட்சியில் பல மாடல்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்தது. திருமண நிகழ்ச்சிக்காக அங்கு பிரமாண்ட செட் போட்டிருந்தனர்.

இந்நிலையில் மாடல்கள் செட்டில் நின்று ஆளாளுக்கு செல்ஃபி எடுத்தனர். செட் டிசைன் கசிந்துவிடும் என்று நினைத்த அல்லு அர்ஜுன் கோபம் அடைந்து மாடல்களை திட்டி செட்டில் இருந்து வெளியே விரட்டியுள்ளார்.

அதன் பிறகு கோபத்தை அடக்கிக் கொண்டு செட்டிற்கு உள்ளே செல்ஃபி எடுக்காதீர்கள் தயவு செய்து வெளியே சென்று எடுங்கள் என்று அமைதியாக கூறியுள்ளார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து வருகிறார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

English summary
Allu Arjun got angry when some models took selfie on the sets of Duvvada Jagannadham being directed by Harish Shankar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil