இதுதான் மாஸ் ப்ரோமோஷன்...பத்திரிக்கையாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அல்லு அர்ஜுன்
பெங்களூரு : அல்லு அர்ஜுன் சமீபத்தில் சுகுமாறன் இயக்கிய புஷ்பா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார்.
தமிழை தொடர்ந்து புஷ்பா படத்தின் மூலம் தெலுங்கிலும் வில்லனாக அறிமுகமாகி உள்ளார் ஃபகத் ஃபாசில். இந்த படத்தில் சமந்தா முதல் முறையாக அயிட்டம் சாங் ஒன்றிற்கு ஆடி உள்ளார். புஷ்பா படத்திற்கான ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

6 மொழிகளில் ரிலீஸ்
இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் நாளை வெளியாக உள்ளது. தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ள புஷ்பா படம் தமிழ், கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.

ரத்தான விமானம்
ஐதராபாத், சென்னையில் ப்ரோமோஷனை முடித்துள்ள புஷ்பா டீம், அடுத்தபடியாக பெங்கரூரு சென்றுள்ளது. மோசமான வானிலை காரணமாக பெங்களூருவிற்கு புஷ்பா டீம் செல்ல இருந்த விமானம் கடைசி நேரத்தில் ரத்தானது. இதனால் கார் மூலம் புஷ்பா டீம் பெங்களூரு சென்றுள்ளது.

இது தான் ப்ரோமோஷனா
விமானம் ரத்தானதால் குறித்த நேரத்திற்கு ப்ரோமோஷன் நடக்கும் இடத்திற்கு புஷ்மா டீமால் செல்ல முடியாமல் போனது. இவர்கள் தாமதமாக வந்ததால் பல மணி நேரம் காத்திருந்து, கடுப்பாகினர் பத்திரிக்கையாளர்கள். தாமதமாக வந்த அல்லு அர்ஜுனிடம், இப்படி காக்க வைத்து தாமதமாக வருவது தான் படத்திற்கு ப்ரோமோஷனாக இருக்கும் என நினைக்கிறீர்களா என பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டார்.

மன்னிப்பு கேட்ட அல்லு அர்ஜுன்
இந்த கேள்வியை எதிர்பாராத அல்லு அர்ஜுன், கேள்வி கேட்டவரிடமும், காத்திருந்த பத்திரிக்கையாளர்களிடமும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். க்ளைமேட் மோசமாக இருந்ததால் தான் என்னால் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை என விளக்கமும் தந்தார்.

கிண்டல் செய்யும் ரசிகர்கள்
ஆனால் அல்லு அர்ஜுனின் இந்த செயலையும் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். பத்திரிக்கையாளர்களிடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்டது கூட படத்திற்கான ப்ரோமோஷனா, இது வித்தியாசமான ப்ரோமோஷனா இருக்கே என்கின்றனர். புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய அயிட்டம் பாடலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தும், இந்த பாடலை தடை செய்யவும் கேட்டு வருகின்றனர். இதனால் கூட மற்றவர்களை கவர அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்டாரா எனவும் பலர் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











