»   »  தங்கர் படத்தில் அமிதாப்?

தங்கர் படத்தில் அமிதாப்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
தங்கர் பச்சான் அடுத்து இயக்கவுள்ள படத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். இப்படத்தில் சத்யராஜ்தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

தரமான தமிழ்ப் படங்களைக் கொடுப்பதில் முன்னோடியானவர் தங்கர் பச்சான். கேமரா மூலம் கவிதை பாடி வந்த தங்கர்பச்சான், தற்போது இயக்குநராக தமிழர்களின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்.

வெற்றிகரமான படங்களைக் கொடுப்பதற்குப் பதில், வாழ்க்கை நிலையை வெளிப்படுத்தும் இயல்பான கதையம்சத்துடன் கூடிய படங்களைக் கொடுப்பதில் பிடிவாதமாக இருப்பவர் தங்கர். அவரது ஒவ்வொரு படமும் ஒரு வாழ்வியல் தத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும்.

அப்படி உருவானதுதான் அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம். அந்த வரிசையில் சேர காத்திருக்கிறது ஒன்பது ரூபாய் நோட்டு.

சத்யராஜும், அர்ச்சனாவும் இணைந்து அற்புதமாக நடித்துள்ள இப்படத்தை சத்தம் போடாமல் இயக்கி முடித்துள்ளார் தங்கர். சத்யராஜுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். கண்டிப்பாக விருது கிடைக்கும் என்ற பேச்சு இப்போதே எழுந்து விட்டது.

இந்த நிலையில் சத்யராஜை வைத்து அடுத்து ஒரு படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளாராம் தங்கர். இப்படமும் இயல்பான வாழ்வியல் கதையாகத்தான் இருக்குமாம். இப்படத்தில் ஒரு விசேஷமாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.

தங்கர் - சத்யராஜ் - அமிதாப். இந்த காம்பினேஷனே வித்தியாசமாக இருப்பதால், மூவரும் இணைந்தால் அது இன்னும் படு வித்தியாசமான படமாக நமக்குக் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Read more about: amitabh thankar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil