»   »  படப்பிடிப்பில் அமிதாப்புக்கு காயம்... 48 மணி நேரம் ஓய்வு!

படப்பிடிப்பில் அமிதாப்புக்கு காயம்... 48 மணி நேரம் ஓய்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிஇ3என் என்ற படத்தின் ஷூட்டிங்கின்போது நடிகர் அமிதாப்பச்சனுக்கு விலா எலும்பில் அடிப்பட்டது.

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தற்போது ‘டிஇ3என்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பின்போது திடீரென அவருடைய விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டார்.

Amitabh injured at TE3N shoot

தற்போது ஓய்வில் இருந்துவரும் அமிதாப், தனக்கு நேர்ந்த விபத்து குறித்து ட்விட்டரில் கூறுகையில், "படப்பிடிப்பின்போது என்னுடைய விலா எலும்பில் அடிபட்டது. உடனடியாக நண்பர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சுவாசிக்கும்போதுதான் வலி ஏற்படுத்துகிறது. அது என்னை ரொம்பவே காயப்படுத்துகிறது. இருப்பினும், என்னுடைய உடல்நிலை பற்றி கவலைப்பட வேண்டாம்.

வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். வலியில் இருந்து குணம் அடைய இன்னும் 48 மணிநேரம் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்," குறிப்பிட்டுள்ளார்.

English summary
Actor Amitabh Bachchan is taking rest after an injury at TE3N movie shooting.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil