»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல்- மாதவன் சேர்ந்து நடித்த அன்பே சிவம் படத்துக்கு நல்ல பெயர் கிடைத்திருந்தாலும் வசூல் கவலை தருவதாகவே உள்ளதாம்.

அழகிய முகத்தில் தளும்புகள், சிதைந்து போன மீசை, சோடா புட்டி கண்ணாடி, அவ்வப்போது இழுத்துக் கொள்ளும் முகம்,செயற்கைக் கால் நடை என கமல் எல்லோரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியிருக்கிறார். கமர்சியல் சினிமாவிலேயே கொஞ்சம்மேசேஜையும் சொல்லிவிட முயன்றிருக்கிறார்.

இப் படத்தில் கமல் தனது நடிப்பில் இன்னொரு அல்டிமேட் பரிமாணம் காட்டியிருக்கிறார் என்றால் அது நிச்சயம் மிகையல்ல.படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது மனதில் இனம்புரியாத கனம் உட்கார்ந்து கொள்வதை உணர முடிகிறது. அந்தஅளவுக்கு பெர்பார்மென்ஸ் காட்டியிருக்கிறார் கமல்.

ஆனால், படம் ஒவர் ஜவ்ஆக இருப்பதாலும், தூக்கலான சிவப்புச் சிந்தனையுடன் வந்திருப்பதாலும் படம் பார்ப்பவர்கள்அடிக்கடி வாயைப் பிளக்கின்றனர். கமலின் நடிப்பைப் பார்த்த ஆச்சரியத்தில் அல்ல, கொட்டாவி விடுவதற்காக.

இதனால் வசூலும் எதிர்பார்த்த மாதிரி இல்லை. இது போன்ற நல்ல படங்கள் தோல்வியடைவது கமலுக்குப் புதிதல்ல. அவர் தான்பாட்டுக்கு அதை ஸ்போர்டிவ்வாகவே எடுத்துக் கொண்டுவிட்டார். அடுத்த படத்துக்கான முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

நளதமயந்தி என்ற பெயரில் தனது ராஜ்மகல் இண்டர்நேசனல் மூலமே புதிய படத்தைத் தயாரிக்க கமல் திட்டமிட்டிருக்கிறார்.இதிலும் மாதவனுக்கு ஒரு ரோல் உண்டு. இதற்காக ஒரு வெளிநாட்டு இலங்கைத் தமிழ்ப் பெண்ணையும் தேடிக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இந்தப் படத்துக்கு ஆரம்பமே பிரச்சனையாகியுள்ளது. கமலுக்கு பைனான்ஸ் செய்ய யாரும் தயாராக இல்லை. இதனால்என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.

கமலின் ஆசைப்படி படம் எடுத்த பல தயாரிப்பாளர்களும் (ஆளவந்தான் தயாரித்த தாணு முதல் அன்பே சிவம்தயாரிப்பாளர்கள் வரை) தங்கள் இழப்புக்கு தகுந்தவாறு தலையில் துண்டு, ஜமுக்காளம் போட்டபடி தான் உட்கார்ந்துள்ளனர்.

இந் நிலையில் நளதமயந்தி படத்தில் நடிப்பதில் மாதவனுக்கும் அவ்வளவாக விருப்பம் இல்லையாம். ரன் படத்தில் சம்பாதித்தமார்க்கெட்டை அன்பே சிவம் கோவிந்தா ஆக்கிவிட்டதாக மாதவன் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

நளதமயந்தி படத்துக்கு கமல் கதை மட்டும் இருக்கட்டும். திரைக் கதையை வேறு புதிய தலைமுறை இளைஞரிடம் தந்து எழுதச்சொல்லலாம் என்பது மாதவனின் எண்ணம். அதை கமலிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தனக்கு வேண்டியவர்களிடம்(நம்மிடமும்!) புலம்பி வருகிறார்.

மதாவனின் கவலைக்கு முக்கிய காரணம் அன்பே சிவம் ஓடாததால் சான்ஸ்களும் அடியாவதோடு தனது சம்பளத்தைக்குறைத்துவிடுவார்களோ என்பது தான்.

இப்போது மாதவன் கையில் உள்ள ஒரே படம் ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்கும் பிரியமான தோழி மட்டும் தான்.

தொழு நோயாளிகளின் தூதன்: கமல்

இதற்கிடையே தொழு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் கமல்ஹாசனின் நற்பணி மன்றம் ஈடுபட்டுள்ளது.

சென்னையில் கமல் ரசிகர் மன்றத்தினர் சார்பில் நடந்த விழாவில் கமல் பேசுகையில், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சைஅளிப்பதற்கான முயற்சிகளை நான் சமீபத்தில் மேற்கொண்டேன். சுமார் ரூ.15 கோடி செலவில் ஏராளமான தொழு நோயாளிகளுக்குச் சிகிச்சைகள்அளிக்கப்பட்டன.

தொழு நோய் என்பது காற்றில் பரவும் நோய் அல்ல என்பதை நாம் பொதுமக்களுக்குப் புரியவைக்க வேண்டும். தொழு நோயாளிகளை நாம்எப்போதுமே ஒதுக்கக் கூடாது.

அவர்களைக் குணப்படுத்த முடியும். அவர்கள் மீண்டும் இவ்வுலகில் முன்பு போலவே வாழ்வதற்கு உதவும் தூதர்களாக நாம் செயல்பட வேண்டும். அப்படி ஒருதூதனாக நான் செயல்பட்டுக் கொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

தொழு நோயாளிகளின் மறுவாழ்வுக்காக என்னுடைய தாய் ராஜலட்சுமியின் பெயரில் ஒரு அமைப்பை வெகு விரைவில் உருவாக்கப் போகிறேன் என்றார்கமலஹாசன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil