Don't Miss!
- News
மத்திய அரசு நிதியை மாற்றி செலவழித்த அதிமுக அரசு! மார்க்சிஸ்ட் பகீர்புகார்! மாஜி மந்திரிக்கு சிக்கல்
- Lifestyle
இரவு உணவை எத்தனை மணிக்குள் சாப்பிட வேண்டும்? விரைவாக சாப்பிடுவது உண்மையில் நல்லதா?
- Sports
சந்திரா.. அவங்க 2 பேரையும் பாத்துக்கோ.. டெஸ்ட் கிரிக்கெட்டை ஆளப்போறங்க.. சேவாக் சொன்ன ஆருடம்
- Finance
ஆர்பிஐ அறிவித்த 30,307 கோடி ரூபாய் ஈவுத்தொகை.. மத்திய அரசு கணிப்பு என்ன தெரியுமா..?!
- Technology
அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!
- Automobiles
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆங்கர் முதல் ஆக்டர் வரை...’டான்’ சிவகார்த்திகேயனின் 10 ஆண்டுகள்
சென்னை: ஒவ்வொரு பத்து ஆண்டுகளில் திரையுலகில் பல நடிகர்கள் வந்தாலும் யாரோ ஒரு நடிகர் மற்றவர்களை பின்னுக்கு தள்ளி முன்னணிக்கு வருவார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் 10 ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளார்.
அடுத்த
சர்ச்சையை
துவங்கிய
ப்ளூ
சட்டை
மாறன்...
இந்த
முறை
எந்த
ஹீரோன்னு
பாருங்க!

வாரிசு பின்புலம் இல்லாமல் வளர்ந்த சிவகார்த்திகேயன்
தமிழ் திரையுலகில் வாரிசு பின்புலம் இல்லாமல் வந்த பிரபல நடிகர்கள் வெகுசிலரே. ரஜினிகாந்த், அஜீத் வரிசையில் சிவகார்த்திகேயனும் ஒருவர் ஆவார். சாதாரண குடும்பத்தில் பிறந்த சிவகார்த்திகேயன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு மிகவும் கஷ்டப்பட்டு பட்டப்படிப்பு முடித்து தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளர் பதவி கிடைத்தால் கூட போதும் என்ற எண்ணத்தில் காலடி எடுத்து வைத்தார்.

மிமிக்ரி வாழ்க்கையைத் தந்தது
மிமிக்ரி திறமையால் விஜய் தொலைக்காட்சியில் நுழைந்த சிவகார்திகேயன், ஆரம்ப காலத்தில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து தருவது என்று ஆரம்பித்தவர் ஜோடி நம்பர்-1 போன்ற போட்டிகளிலும் கலந்து அசத்தினார். பின்னர் தொடர்ச்சியாக விஜய் தொலைக்காட்சியில் முன்னணி ஆங்கராக வலம் வந்த சிவகார்த்திகேயன் பின்னர் விஜய் அவார்ட்ஸ் உள்ளிட்ட பெரிய அவார்ட் பங்ஷனில் தொகுப்பாளராக உயர்ந்தார்.

நகைச்சுவை உணர்ச்சி, எளிமை உயர்வுக்கு காரணம்
இயல்பாகவே நகைச்சுவை உணர்ச்சி மிக்க சிவகார்த்திகேயன் கூடவே அவருடைய மிமிக்ரி திறமையும் சேர்ந்து அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. பழகுவதற்கு எளிமையாகவும், நகைச்சுவை உணர்ச்சியும், நல்ல தோற்றமும் உள்ள இளைஞர் சினிமா உலகம் ஆகர்ஷிக்காமல் வேறு என்ன செய்யும். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு அவரை தேடி வர சினிமா உலகத்திற்கு சின்ன நடிகராக நுழைந்தார் சிவகார்த்திகேயன்.

10 வயதில் ஆரம்பித்த மிமிக்ரி திறமை
அவரது பெரிய லட்சியமே விமல் போன்று ஒரு நடிகராக உயர வேண்டும் என்பதே. காவல்துறையில் பணியாற்றிய தந்தையின் திடீர் மரணம் சிவகார்த்திகேயன் குடும்பத்தை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தள்ளியது. குடும்பத்தை தனது உழைப்பின் மூலமாகவே உயர்த்திக் கொண்டு வரமுடியும் என்ற லட்சியத்துடன் நுழைத்தார். தனது பத்து, பதினொரு வயதில் உறவினர்களிடையே மிமிக்ரி செய்தித்தாளில் கிடைத்த வரவேற்பை அடுத்து அதிகமாக செய்ய ஆரம்பித்தார்.

விஜய் டிவியால் கிடைத்த வரவேற்பு
கிருபானந்த வாரியார் குரலை மிமிக்ரி செய்ததன் மூலம் கிடைத்த வரவேற்பு காரணமாக அமைந்தது சிவகார்த்திகேயன் கல்லூரி வாழ்க்கையில் மிமிக்ரியில் அதிக ஆர்வம் காட்டினார். செந்தில், கவுண்டமணி, விவேக் போன்றோருடைய காமெடிகளை வாழ்க்கையில் அன்றாடம் செய்து காட்டுவதற்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து அடுத்தடுத்த முயற்சி எடுத்தார். பின்னர் அதுவே விஜய் தொலைக்காட்சியில் அவர் நுழைவதற்கு காரணமாக அமைந்தது. பின்னராக தொகுப்பாளராகி அதன்மூலம் நிகழ்ச்சி தொகுப்பாளர் என ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் சிவகார்த்திகேயன்.

திரையுலக வாழ்க்கை
2012 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது 'மெரினா' என்கிற படம் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவில் ரோல் இல்லாவிட்டாலும் தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணை காதலிக்கும் சராசரி இளைஞன் ரோலை மகிழ்ச்சியுடன் செய்ததால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

சிறப்பான 2012 ஆம் ஆண்டு
இதையடுத்து அதே ஆண்டில் தனுஷுடன் நண்பர் ரோலில் '3' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ஐஸ்வர்யா டைரக்ட் செய்த படம். இந்த படத்தில் தனுஷின் பள்ளி தோழனாக வரும் சிவகார்த்திகேயனின் நகைச்சுவை மிக சிறப்பாக இருக்கும். அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும். இதற்கு பின் 'மனங்கொத்தி பறவை' என்ற படத்தில் நடித்தார். அதில் பக்கத்து வீட்டு பெண்ணை காதலிக்கும் இளைஞனாக வருவார் 2012 ஆம் ஆண்டில் இந்த மூன்று படங்களும் சிவகார்த்திகேயன் என்ற இளம் நடிகரை ரசிகர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

தந்தை சென்டிமென்ட்டில் முதல் படம்
தங்கள் வீட்டுப் பிள்ளை போல் இருக்கும் சிவகார்த்திகேயனை இளைஞர்களும், இளம்பெண்களும், நடுத்தர குடும்பத்தினரும் ரசிக்க ஆரம்பித்தனர் இது சிவகார்த்திகேயனுக்கு ஒரு நல்ல பாதையாக அமைந்தது. 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று தான். விமல், சூரியுடன் சேர்ந்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற நகைச்சுவை படத்தில் நடித்தார். இந்த படம்தான் தந்தை சென்டிமென்ட் படத்தின் முதல் படமாகும். இதில் வரும் நா.முத்துகுமார் எழுதிய 'தெய்வங்கள் எல்லாம்' என்கிற பாடல் இன்றுவரை தந்தை சென்டிமென்ட் பாடலாக உள்ளது.

சட்டையர் ஹீரோ ரசிக்கப்பட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கம்
அதே ஆண்டில் 'எதிர்நீச்சல்' 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போன்ற படங்களில் நடித்தார். இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் அவரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றது. தமிழகம் முழுவதும் பி, சி ஆடியன்ஸ் மத்தியில் பிரபலம் அடைந்தார் சிவகார்த்திகேயன். அலட்டல் இல்லாத நகைச்சுவையுடன் கூடிய சட்டையர் செய்யும் இளைஞராக வந்த சிவகார்த்திகேயன் பெரிதும் ரசிக்கப்பட்டார்.

ஓட்டமாக ஓடிய மான் கராத்தே
சிவகார்த்திகேயன் 2014 ஆம் ஆண்டு நடித்த 'மான் கராத்தே' படம், அவருக்கு நடிக்க வரும் சிறப்பாக நடிப்பார் என்கிற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு இளைஞனை ஒரு கும்பல் தயார் பாக்சிங் சாம்பியனாக்கி ரூ. 2கோடி பரிசை வெல்வதாக கதை இருக்கும். இடையில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை கொண்ட இந்த படம் கிண்டல் கலந்த நகைச்சுவை, காதல் செய்வதில் காட்டிய நகைச்சுவை அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

ராசியான ரஜினி முருகன் படம்
அதன் பின்னர் தனுஷின் தயாரிப்பில் 'காக்கிச்சட்டை' படத்தில் நடித்தார் இந்த படம் முற்றிலும் மாறுபட்ட படமாக அமைந்தது. காவல்துறை வேடமேற்று நடித்த முதல் படம், இமான் அண்ணாச்சிடன் சேர்ந்த அவர் அடிக்கும் லூட்டிகள் படத்தில் சிறப்பாக இருக்கும். 2014 ஆம் ஆண்டும் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக அமைந்தது 'ரஜினிமுருகன்' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கலக்கினார். இதிலும் அவருடைய காமெடி கலந்த நடிப்பு மக்களை பெரிதும் கவர்ந்தது.

அட இது பெண்ணா? ஆணா? ரெமோ படம் சிறப்பு
அடுத்த படம் 'ரெமோ' இந்த படத்தில் சிவகார்த்திகேயன் யார் என்பதை நிரூபித்தார் கதாநாயகியை கவர இளம் வயது நர்ஸ் போல் வேடமிட்டு நடித்த இந்த படம் மிகச்சிறப்பாக அமைந்தது. பெண்ணாகவே மாறிப்போனார் சிவகார்த்திகேயன். பின்னர் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்தார் இது ஒரு சீரியஸ் ஆன படமாகும். பஹத் பாசிலும் இப்படத்தில் நடித்திருப்பார். இந்தப்படம் சிவகார்த்தியனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.

அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு படம், நெல்சனின் டாக்டர்
பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் நடிப்பில் அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் நடித்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது தங்கையாக நடித்து இருப்பார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடித்த 'டாக்டர்' படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

தலைவர் 169-லும் வாய்ப்பா? உயர உயர போகும் சிவகார்திகேயன்
இந்த வரிசையில் இந்த ஆண்டு டான் படம் வெளியாகியுள்ளது. மீண்டும் ஒரு தந்தை சென்டிமென்டை விளக்கும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று உள்ளார். சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் பாடலையும் எழுதியுள்ளார். ரஜினிகாந்தின் அடுத்த படமான 'தலைவர் 169' படத்திலும் ஒரு ரோலை சிவகார்த்திகேயன் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

10 ஆண்டுகளில் பி & சி ரசிகர்களை கவர்ந்த எஸ்கே
திரைத்துறையில் பத்தாண்டு காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியும், பி & சி ஆடியன்ஸ்கள் மத்தியில் பெருத்த வரவேற்பையும் பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன். தனது எளிமையான நடவடிக்கைகள், நல்ல பழக்கவழக்கங்கள், எந்தவித சர்ச்சையிலும் சிக்காத ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகராகவும், பாடல்கள் எழுதுபவராகவும் பன்முகத் தன்மையுடன் சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

அடுத்த 10 ஆண்டுகளிலும் உச்சம் தொடுவாரா?
திரைப்படத்திற்கு வருவதற்கு முன்பே 2010 ஆம் ஆண்டே சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை மணந்தார். தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. பெரிய அளவில் சர்ச்சையில் சிக்காத நடிகராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்த பத்து ஆண்டுகளில் மிக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இன்னும் பல உயரங்களைத் தொடுவார் என தெரிகிறது.