»   »  கோவை ரசிகர்களின் ‘டங்கா மாரி’டான்ஸ்: தனுஷ் பாராட்டு

கோவை ரசிகர்களின் ‘டங்கா மாரி’டான்ஸ்: தனுஷ் பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் பாடிய கொலை வெறி உலகம் முழுவதும் ஹிட் அடித்தது. அந்த ஹிட்டை மறக்கடிக்கும் விதமாக இன்றைக்கு எங்கு பார்த்தாலும் டங்கா மாரி பீவர்தான்.

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள அனேகன் திரைப்படத்தின் 'டங்கா மாரி' பாடல் படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வைரல் ஹிட்டாக உலா வந்தது.

தற்போது படம் வெளியான பிறகும் அந்தப் பாடலுக்கான மவுசு குறையாமல் பலரும் அந்தப் பாடலைப் பாடி, நடனமாடி இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களைக்கூட டங்கா மாரிக்கு ஆடவைத்தாகி விட்டது. எம்.ஜி.ஆரையும் விட்டு வைக்கவில்லை.

கோவை ரசிகர்கள்

கோவை ரசிகர்கள்

நடிகர் தனுஷின் கோவை ரசிகர்கள், அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், தாங்களாகவே ஒரு 'டங்கா மாரி' பாடல் வீடியோ எடுத்து பதிவேற்றியுள்ளனர்.

அதிரடி ஆட்டம்தான்

அதிரடி ஆட்டம்தான்

விளையாட்டாக எடுத்த வீடியோக்களைப் போல இல்லாமல் தொழில்முறை கலைஞர்களுக்கு நிகராக இந்த வீடியோ நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது.

அட நல்லாயிருக்கே

அட நல்லாயிருக்கே

இக்காட்சிகளை வினோத் இயக்க, கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நடனங்களை முரளி மற்றும் அருண் இருவரும் இணைந்து அமைத்திருக்கிறார்கள். இந்த வீடியோவும் இப்போது யுடுயூப்பில் ஹிட் அடித்துள்ளது.

பாராட்டிய தனுஷ்

இதைப் பார்த்த நடிகர் தனுஷ், சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்கள் முயற்சிக்கும் பாராட்டுகளையும் கூறி வீடியோ இணைப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

English summary
Dhanush Fans from Coimbatore have made Anegan's Danga Maari Song in their way. Only for Dhanush
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil