தளபதி 67 ல் இதெல்லாம் கிடையாதா... இப்படி ஒரு அப்டேட்டை எதிர்பார்க்கவே இல்லையே

சென்னை : புதியதாக ஒரு படம் பற்றிய அறிவிப்பு, அப்டேட் வெளியிடுகிறார்கள் என்றால் அந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், என்ன கதை, என்னவெல்லாம் ஸ்பெஷல் என்று தான் வெளியிடுவார்கள். வெளிவரும் தகவல்களும் அப்படி தான் இருக்கும். ஆனால் தளபதி 67 படம் பற்றிய தகவலே வித்தியாசமாக உள்ளது.

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த படத்தின் ரிலீஸ் தேதி என்ன, அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும், எப்போது வெளியிடுவார்கள் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றிய பல தகவல்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பீஸ்ட் அடுத்த அப்டேட் எப்போ

பீஸ்ட் அடுத்த அப்டேட் எப்போ

பீஸ்ட் படத்தை ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் அடுத்த அப்டேட்டாக பீஸ்ட் டீசர் அல்லது செகண்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாம். இதற்கான அறிவிப்பு போஸ்டர் அல்லது வீடியோ வெளியிடப்பட உள்ளதாம். இதில் ரிலீஸ் தேதியுடன் இருக்கும், பீஸ்ட் அப்டேட் இந்த வாரம் வரும் என கூறப்படுகிறது. மார்ச் மாத இறுதியில் பீஸ்ட் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாம்.

தளபதி 66 அப்டேட்டும் வந்தாச்சு

தளபதி 66 அப்டேட்டும் வந்தாச்சு

பீஸ்ட் படம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தளபதி 66 படத்தை வம்சி பைடபள்ளி இயக்க போவதாகவும், தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமன் இசையமைக்கும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மாஸ்டர் காம்போ

மீண்டும் மாஸ்டர் காம்போ

இதற்கிடையில் சமீபத்தில் தளபதி 67 பற்றிய அறிவிப்புகளும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க போவதாக தகவல் வெளியானது. பீஸ்ட் பட ரிலீஸ், லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கும் கமலின் விக்ரம் படம் ஆகியவை ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.

Recommended Video

'மகன் விஜய்க்காக பட்ட சிரமம்'- SA Chandrasekhar | Part 4 | Filmibeat Tamil
தளபதி 67 ல் இதெல்லாம் இல்லையா

தளபதி 67 ல் இதெல்லாம் இல்லையா

லேட்டஸ்ட் தகவலாக தளபதி 67 படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தயார் செய்து விட்டாராம். இந்த படத்தில் பாடல்களோ, ஹீரோயினோ கிடையாதாம். இது முழுக்க முழுக்க ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட உள்ளதாம். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கார்த்தியை வைத்து இயக்கிய கைதி படத்திலும் பாடல்களோ, ஹீரோயினோ கிடையாது. இருந்தாலும் அந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. விரைவில் லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இயக்க போவதாக கூறப்பட்டு வந்த நிலையில், கைதி ஸ்டைலில் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்க தயாராகி வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X