»   »  ஸ்னேகா-மம்முட்டி-அர்ஜூன்

ஸ்னேகா-மம்முட்டி-அர்ஜூன்

Subscribe to Oneindia Tamil

மம்முட்டி தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வரும் அறுவடை (மலையாளத்தில் வந்தே மாதரம்) படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூனும் நடிக்கவுள்ளார்.

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தே மாதரம் மூலம் தமிழுக்கு வருகிறார். இப்படத்தின் தமிழ் டைட்டிலை மட்டும் அறுவடை என மாற்றியுள்ளனர்.

இப்படத்தில் மம்முட்டியுடன் ஜோடி போட்டுள்ளார் ஸ்மைல் பிரின்சஸ் ஸ்னேகா. சனிக்கிழமை சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது.

மம்முட்டி, ஸ்னேகா சம்பந்தப்பட்ட காட்சிகளை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பங்களாவில் வைத்து ஷூட் செய்தனர். மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்த கார்த்திக் என்பவர்தான் இப்படத்தை இயக்குகிறார். பங்கஜ் பிலிம்ஸ் ஹென்றிதான் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தில் முக்கியமான ரோலுக்கு அர்ஜூனை நடிக்க வைக்க ஹென்றி திட்டமிட்டுள்ளார். தேசபக்தியை வெளிப்படுத்தும் ஆக்ஷன் கேரக்டராம் இது. அர்ஜூன்தான் தேச பக்தி ஜாஸ்தியானவராச்சே. அனால் அவர்தான் இதற்கு பொருத்தமானவராக இருப்பார் என்பது ஹென்றியின் எண்ணம். அர்ஜூனும் சம்மதித்து விடுவார் என நம்புகிறார்.

கலாபவன் மணியும் முக்கியமான ஒரு ரோலில் நடிக்கிறாராம். இப்படத்தில் மம்முட்டி ஐபி ஆபிசராக நடிக்கிறார். காவல்துறையையும், பாதுகாப்பு அமைப்புகளையும் சீர்குலைத்து நாட்டை நாறடிக்க நினைக்கும், தீவிரவாதக் கும்பலுக்கும், ஐ.பிக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் கதையாம்.

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் ரம்யமாக வந்திருக்கிறதாம். அழகிய ஸ்னேகா பைலட்டாக இப்படத்தில் நடிக்கிறார். தேசபக்தி, குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் என எல்லாவற்றையும் போட்டு மிக்ஸ் செய்து படத்தை எடுக்கிறார்களாம்.

ஜெய்ஹிந்த்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil