»   »  நைசா நழுவிய ஆர்யா, விஷாலுடன் துணிந்து மோதும் அர்ஜுன்

நைசா நழுவிய ஆர்யா, விஷாலுடன் துணிந்து மோதும் அர்ஜுன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரும்புத்திரை படத்தில் விஷாலுக்கு வில்லனாக அவரது குரு அர்ஜுன் நடிக்க உள்ளாராம்.

புதுமுகம் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா ஜோடி சேரும் படம் இரும்புத்திரை. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்குமாறு விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யாவிடம் கேட்கப்பட்டது.

Arjun to trouble Vishal in Irumbu Thirai

முதலில் ஒப்புக் கொண்டவர் தனது ஹீரோ இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்ற பயத்தில் பின்னர் படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் விஷாலுக்கு வில்லனாக அவரது குருவான அர்ஜுன் நடிப்பதாக கூறப்படுகிறது.

அர்ஜுனின் வேதம் படத்தில் விஷால் அவருக்கு உதவியாளராக பணியாற்றினார். அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக அறிமுகமானது விஷாலின் படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம்.

English summary
According to reports, Arjun is likely to be Vishal's villain in the latter's upcoming movie Irumbu Thirai being directed by debutant Mithran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil