»   »  ஹாலிவுட் செல்லும் அருண் விஜய்

ஹாலிவுட் செல்லும் அருண் விஜய்

Subscribe to Oneindia Tamil
Arun Vijay with Sheela
நடிகர் அருண் விஜய், ஹாலிவுட்டுக்குப் போய் திரைப்படத் தொழில்நுட்பம் தொடர்பாக படிக்கப் போகிறாராம்.

நவரச நடிகர் விஜயக்குமாரின் புதல்வரான அருண், திறமைகள் இருந்தும் இதுவரை நல்ல பிரேக் கிடைக்காமல் திணறி வருகிறார்.

பாண்டவர் பூமி, இயற்கை, ஜனனம் என அவர் நடித்த பல படங்கள் நல்ல படங்களாக இருந்தும், நன்றாக ஓடியும் கூட இதுவரை ஸ்டார் நடிகராக அருண் பிரகாசிக்க முடியவில்லை.

சமீபத்தில்தான் தனது பெயரை ராசி பார்த்து அருண் விஜய் என மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் அவர் நடித்த தவம் சொல்லிக் கொள்ளும்படி அருணுக்குப் பெயர் வாங்கித் தந்தது. தற்போது வேதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மேலும் 3 படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது 2 மாத படப்பிடிப்பு இடைவெளி கிடைத்துள்ளதாம். இதைப் பயன்படுத்தி ஹாலிவுட்டுக்குப் போய் திரைப்பட தொழில்நுட்பம் தொடர்பாக படிக்கப் போகிறாராம் அருண்.

இதற்கு ஒரு காரணமும் உள்ளது. அதாவது மூவீஸ் ஸ்லைட் பிரைவேட் லிமிட்டெட் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனத்தை அருண் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலம் வருடத்திற்கு 4 படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

தயாரிப்பாளராக மாறிய பின்னர் வெறுமனே நடிகராக மட்டும் இருந்தால் முழுமையான முறையில் நிறுவனத்தை பராமரிக்க முடியாது, தொழில்நுட்பங்கள், தயாரிப்பு நிர்வாகம் குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். இதனால்தான் ஹாலிவுட் போய் இதுதொடர்பாக அறிந்து கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறாராம் அருண்.

வருகிற 18ம் தேதி அமெரிக்கா செல்லும் அருண், அங்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள யுனிவர்சல் ஸ்டூடியோவுக்கு சென்று அங்குள்ள நியூயார்க் பிலிம் அகாடமியில் படிக்கப் போகிறார்.

இயக்கம், தயாரிப்பு, எடிட்டிங், கேமரா உட்பட பல நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவிருக்கிறார்.

தவம் கொடுத்த புது வலிமையால் முன்பை விட தெளிவாக மாறியிருக்கும் அருண், ஹாலிவுட் போய் விட்டு வந்த பின்னர் இயக்குநர் அவதாரம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil