Don't Miss!
- Sports
இவரை நியாபகம் இருக்கா? தோனியின் மானத்தை காப்பாற்றிய ஜோகிந்தர் சர்மா.. ஓய்வு முடிவை அறிவித்தார்
- News
அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
போலீசாக நடிக்க பிட்டான உடல் தான் காரணமா.... நடிகர் அருண் விஜய் பதில்!
சென்னை: மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் அருண் விஜய்.
அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மெடிக்கல் கிரைம் த்ரில்லர் படமான 'குற்றம் 23' படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளிலும் நல்ல வரபேற்பை பெற்றதது. இதையடுத்து, இயக்குநர்கள் கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் புதிய படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அருண் விஜய்.

அவரது கட்டுக்கோப்பான உடலமைப்பு தான் போலீசார் அதிகாரி ரோலுக்கு இயக்குனர்கள் அவரை அணுக தூண்டுகிறதா என்று கேட்டால், புன்னகையுடன் அருண் விஜய் கூறுகிறார், "நான் அப்படி நினைக்கவில்லை. ஏனென்றால், 'குற்றம் 23' படத்தில் கூட நான் உடலை காட்டுவதோ, அல்லது அதிரடியான சண்டைக்காட்சிகளிலோ அதிகம் நடிக்கவில்லை. அது முழுக்க முழுக்க புத்திசாலித்தனம் சம்பந்தப்பட்ட ஒரு படம். அந்த படத்தை எனக்கு வழங்கிய இயக்குனர் அறிவழகனுக்கு நன்றி. இந்த கதையை இயக்குனர் கோபிநாத் என்னிடம் சொன்னபோது, அது பல அற்புதமான திருப்பங்களை கொண்டிருந்தது. மேலும் கதையே மிகவும் சிறப்பாக இருந்தது.
Thirumanam
review:
ஆடம்பர
திருமணங்களின்
அவஸ்தைகளைச்
சொல்லும்
சேரனின்
'திருமணம்'!
-
விமர்சனம்
குற்றம் 23க்கும் மற்றும் இந்த படத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், குற்றம் 23 மருத்துவத்துறையை மையமாக கொண்ட ஒரு திரில்லர். ஆனால் இந்த படம் நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளை பற்றியும், அவற்றின் பின்னணியில் உள்ள மர்மத்தை போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதையும் பற்றியது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்து வருகிறார் இயக்குனர். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்" என்றார்.
தற்போது, அருண் விஜய் கொல்கத்தாவில் அக்னி சிறகுகள் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி இன்னொரு கதாநாயகனாக நடிக்க, ஷாலினி பாண்டேவும் உடன் நடித்து வருகிறார். மேலும், குத்துச்சண்டை விளையாட்டை அடிப்படையாக கொண்ட 'பாக்ஸர்' திரைப்படத்தையும் மிக விரைவில் தொடங்க இருக்கிறார் அருண் விஜய்.